பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து: மத்திய அரசு

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
TollPlaza, CoronaVirus, NitinGadkari, Minister, டோல்பிளாசா, சுங்கக்கட்டணம், கொரோனா வைரஸ், நிதின் கட்கரி, அமைச்சர், கட்டணம், ரத்து

புதுடில்லி: ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி, மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலுக்கு வந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், அனைத்து டோல் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.


latest tamil newsஇந்நிலையில் நாடு முழுவதும் இன்று (மார்ச் 26) முதல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் டோல் கட்டணங்களை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ​​இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது அவசரகால சேவைகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமான நேரத்தையும் மிச்சப்படுத்தும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
26-மார்-202020:17:39 IST Report Abuse
K.Sugavanam கொரோனா பீதியிலும் நகைச்சுவைக்கு பஞ்சம் வைக்காமல் சிரிக்க வைக்க முயலும் மத்திய அரசு..சூப்பர்.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
26-மார்-202020:15:34 IST Report Abuse
K.Sugavanam கருத்தடை ஆபரேஷன் பண்ணிவிட்டு பிரசவத்துக்கு இலவச சேவை இன்னு சொல்லுவது போன்ற இந்த அறிவிப்பு நகைப்புக்கிடமாக உள்ளது..LOCK DOWN க்கு அப்புறம் நிரந்தரமா டோல் கட்டணம் கைதுசெய்யப்படுகிறது என அறிவியுங்கள்.பாராட்டலாம்.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-மார்-202017:19:59 IST Report Abuse
தாண்டவக்கோன் CURRENCY EXCHANGE MELA போது எட்டு மாசமா இவுனுங்க அடிச்செ கூத்துல்லாம் ஒன்னுவுடாமெ இனிமேல்ட்டு தொடரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X