கொரோனாவை தடுக்கும் நான்கு மருந்துகள்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
CoronaVirus, WHO, COVID19, FourDrugs, கொரோனா வைரஸ், தடுப்பு மருந்து, உலகசுகாதாரஅமைப்பு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க 4 மருந்துகள் பரிசோதனை செய்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு சிறந்த சிகிச்சையை கண்டறிய உலக சுகாதார அமைப்பு, சர்வதேச மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது. இது குறித்து அதன் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில்,
நான்கு மருந்துகள் கொரோனா வைரஸ் (கோவிட் 19) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். இதில் ஒரு மருந்து, எபோலோவுக்கும், மற்றொன்று ஆன்டிமலேரியலுக்கும், மீதமுள்ள இரு மருந்துகள் எச்.ஐ.வி.,க்கும் சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டதாகும்.
இந்த பரிசோதனை, உலகம் முழுதும் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும். பரிசோனை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், தங்கள் நோயாளியின் முன்னேற்றத்தை நேரடியாக உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கலாம், என்றார்.


latest tamil newsரெம்டேசிவிர்ரெம்டெசிவிர் என்பது ஒரு வைரஸ் தடுப்பு மருந்து ஆகும், இது முதலில் எபோலாவை சமாளிக்க உருவாக்கப்பட்டது. ஆனால் 2017 ஆம் ஆண்டில், வட கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சார்ஸ் மற்றும் மெர்ஸ்-ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்களை இந்த மருந்து தடுக்கக்கூடும் என்று கண்டறிந்தனர். எனவே கோவிட்-19ஐ ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸையும் இது தடுக்கக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த மருந்து, வைரஸ் பரவக்கூடிய நொதியை கட்டுப்படுத்துகிறது. சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த மருந்தை கோவிட்-19 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து வருகிறது.


latest tamil newsகுளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது குளோரோக்வினின் வழித்தோன்றலாகும். ரெம்டேசிவிரை போல, இதுவும் சார்ஸை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை தடுக்கக்கூடியது. மேலும், வைரஸை உயிரணுக்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது. சீன அகாடமி ஆப் சயின்ஸில் வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இந்த மருந்து மனித உயிரணுக்களில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை வெற்றிகரமாக நிறுத்தியது கண்டறியப்பட்டது. கோவிட்-19 நோயாளிகளுக்கான சோதனைகள் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் நடந்துள்ளன. ஆனால் சோதனைகள் சிறியதாக இருந்ததாகவும், அவற்றில் அனைத்து தரவுகளையும் வெளியிடப்படவில்லை.


latest tamil newsரிடோனவிர் மற்றும் லோபினவிர் ஆகியவற்றின் கலவை

ரிடோனவிர் மற்றும் லோபினவிர் ஆகிய இரண்டும் ஆன்டிவைரஸ் மருந்துகள் ஆகும். லோபினவிர் ஒரு முக்கியமான எச்.ஐ.வி நொதியைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது, கொரோனா வைரஸ்களின் நொதிகளைத் தடுப்பதற்கும் இந்த மருந்து செயல்படக்கூடும். மேலும் மெர்ஸை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை எதிர்ப்பதில் சில வெற்றிகரமான சோதனைகளும் நடந்துள்ளன. இருப்பினும், அந்த சோதனையில், இது தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எனவே நோய் கண்டறியப்பட்ட உடனேயே மருந்து நிர்வகிக்கப்பட்டால், இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.


லோபினவிர், ரிடோனவிர் மற்றும் இன்டர்பெரான் பீட்டாவின் கலவை

மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு சிகிச்சையளிக்க லோபினவிர் மற்றும் ரிடோனவிர் ஆகியவற்றுடன் கூடுதலாக இன்டர்பெரான் பீட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மருந்துகளின் கலவையானது சவுதி அரேபியாவில் உள்ள மெர்ஸ் நோயாளிகளுக்கு ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோவிட்-19 நோயாளிகளுக்கு அதன் தாக்கம் இன்னும் அறியப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
28-மார்-202012:30:27 IST Report Abuse
madhavan rajan ஒரு சித்த மருத்துவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அலோபதியில் ஒரு மருந்துகூட இந்தியர்கள் கண்டுபிடித்து கிடையாது. வெளிநாட்டினரால் திணிக்கப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை பிற்காலங்களில் தீமை தருவது பயன் படுத்தாதீர்கள் என்று வேறு கூறுகின்றனர். அமெரிக்காவில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் இந்தியாவில் மருத்துவர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எல்லாம் மேலை நாட்டு வியாபாரம் ஆகிவிட்டது. அப்படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) விரைவில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்...
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-மார்-202013:23:23 IST Report Abuse
 Muruga Vel அவர் என்னமோ பரிசோதிக்கிற மாதிரி படம் போட்டிருக்கீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X