கொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்!

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
கொரோனா வைரஸ் தாக்கி, மூச்சு விட சிரமப்படுவோருக்கு, 'வென்டிலேட்டர்' எனப்படும் சுவாச உதவிக் கருவி கட்டாயம் தேவை. இந்தக் கருவியில் உள்ள இரு 'வால்வு'களை, 8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றியாகவேண்டும்.தற்போது இத்தாலியில் இந்த வால்வுகளை முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் விரைவில் தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது.வடக்கு இத்தாலியிலுள்ள பிரெசியா நகரில் ஒரு
கொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்!

கொரோனா வைரஸ் தாக்கி, மூச்சு விட சிரமப்படுவோருக்கு, 'வென்டிலேட்டர்' எனப்படும் சுவாச உதவிக் கருவி கட்டாயம் தேவை. இந்தக் கருவியில் உள்ள இரு 'வால்வு'களை, 8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றியாகவேண்டும்.தற்போது இத்தாலியில் இந்த வால்வுகளை முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் விரைவில் தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது.

வடக்கு இத்தாலியிலுள்ள பிரெசியா நகரில் ஒரு மருத்துவமனையில், அண்மையில், 250 கொரோனா நோயாளிகள் சேர்க்கப்பட்டனர். அத்தனை பேருக்கும் பொருத்தவும், மாற்றவும் வென்டிலேட்டர் வால்வுகள் போதாக்குறை ஏற்பட்டது.

இதை கேள்விப்பட்ட ஒரு பத்திரிகையாளர், அதே நகரிலிருந்த இசின்னோவா என்ற முப்பரிமாண அச்சியந்திர நிறுவனத்தை தொடர்புகொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தந்தார். அடுத்த சில மணி நேரங்களில் சில வென்டிலேட்டர் வால்வுகளின் மாதிரிகளை இசின்னோவா நிறுவனம் தயாரித்து, மருத்துவர்களின் பார்வைக்கு அனுப்பியது.

அது மருத்துவத் தரத்தில் இருக்கவே, உடனே தயாரித்துத் தரும்படி வேண்டுகோள் விடுத்தது பிரெசியா மருத்துவமனை. மணிக்கு ஆறு வால்வுகளை மட்டுமே இசின்னோவாவினால் தயாரிக்க முடியும் என்பதால், அருகே உள்ள வேறு சில முப்பரிமாண அச்சியந்திர நிறுவனங்களும் இலவசமாக தயாரித்து தர முன்வந்தன.

இதனால் பிரெசியா மருத்துவமனையிலிருந்த, 250 கொரோனா நோயாளிகளுக்கும் மூச்சுக் கருவியை பொருத்த முடிந்தது. முப்பரிமாண அச்சியந்திரம் உயிர்காக்கும் கருவியாகவும் மாறியிருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X