பொது செய்தி

தமிழ்நாடு

காலை 3.30 முதல் 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
milk, பால், பால்விற்பனை,

சென்னை: நாளை (மார்ச் 27) அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும் என பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆனால், ஆவின் பால் காலை முதல் இரவு வரை தட்டுபாடின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாளை அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும். பால் முகவர்கள் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படும். சில்லரை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 27, 28) தேதிகளில் செயல்படாது என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மக்கள் நலன் கருதியும், அத்யாவசிய பொருட்கள் கிடைத்திட ஏதுவாக, கோயம்பேடு மார்க்கெட் நாளை செயல்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.


ஆவின் கிடைக்கும்

ஆனால், தமிழகத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் காலை முதல் இரவு வரை பால் தட்டுபாடின்றி கிடைக்கும் எனவும், பால் தட்டுபாடு ஏற்படுமோ என மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வசந்தகுமார், சென்னை காலை 9 மணி வரை என கட்டுபாடு விதிக்கும் பச்சத்தில் மக்கள் அதிகளவு ஒன்று கூடுவர். நேரத்தை நீட்டியமைக்கும் பொழுது அதிகளவு ஒன்று கூடுவதை தவிர்கலாம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
26-மார்-202015:50:25 IST Report Abuse
Girija என்ன இருந்தாலும் ராஜேந்திர பாலாஜி இருந்தால் கலகலப்பே வேறு வேறு யாரும் இதுபோல் அறிவிப்புகளை தரமுடியாது . கோபக்கார நல்லமனிதர். போட்டுக்கொடுத்த ஊடக நண்பருக்கு நன்றி . விழுப்புரம் விஷயத்தில் அதிமுக அவசரம்.
Rate this:
Cancel
26-மார்-202015:21:33 IST Report Abuse
R. SUBRAMANIAN ஆவின் நிறுவனத்திற்கு தினமலர் நாளிதழ் மூலம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். மாதாந்திர அட்டைதாரர்கள் ஏப்ரல்5ந் தேதிக்குள் பால் அட்டையை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.சூழ்நிலை கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இதை உரியவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லவேண்டும். இதையெல்லாம் எதிர்கட்சி தலைவர்கள் செய்ய மாட்டார்கள்.நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X