கொரோனாவை இந்தியா வெல்லும்: சீனா நம்பிக்கை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா தொற்று நோய்க்கு எதிராக சீனாவின் தீவிரமான போராட்டத்தில், முககவசங்கள், மருத்துவ உபகரணங்களை தக்க சமயத்தில் வழங்கிய இந்தியாவின் உதவிக்கு சீனா நன்றி தெரிவித்து. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா விரைவில் வெல்லும் என தெரிவித்துள்ளது.latest tamil news


புதுடில்லியில் இந்தியாவிற்கான சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கூறியதாவது: "கொரோனாவிற்கு எதிராக இந்தியாவின் தீவிரமான முயற்சிக்கு, சீன நிறுவனங்கள் உதவ தொடங்கியுள்ளன. இந்தியாவிற்கு தேவையான ஆதரவையும், உதவிகளையும் அளிப்பதற்கு தயாராக உள்ளோம்.

சீனாவில் கொரோனாவல் 81,000 பேர் பாதிப்படைந்தனர். 3,200 பேர் உயிரிழந்தனர். சீனாவிற்கு 15 டன் அளவில், மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது. அதில் முகக்கவசங்கள், கை உறைகள், மற்றும் பிற மருத்துவ சாதனங்களையும் வழங்கியது. சீனாவும் இந்தியாவும் தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வருவதோடு, கடினமான காலங்களில் தொற்றுநோயைச் சமாளிப்பதில் ஒருவருக்கொருவர் ஆதரவையும் அளித்து வருகின்றன. இந்திய மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அதற்காக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


latest tamil news


கொரோனா தொற்றை கண்டறிதல், தடுத்தல், கண்டறிதல், சிகிச்சையளித்தல் தகவல்களை சீனா பகிர்ந்து கொண்டது. இதுகுறித்த வீடியோவை கிழக்கு ஆசியா, தெற்காசிய நாடுகளுடன் , கொரோனாவுக்கு எதிரான தனது அனுபவங்களை ஆன்லைன் வீடியோவில் சீனா கூறியுள்ளது. இதியா வீரைவிலேயே கொரோனாவில் இருந்து மீளும் என நாங்ககள் நம்புகிறோம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இணைந்து, ஜி20, பிரிக்ஸ் நாடுகள் மூலமாக சீனா ஒத்துழைப்பு வழங்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-மார்-202005:54:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni எங்களைப்பாதுகாக்க எங்கள் மோடிஜி இருக்காருங்க இப்போது தமிழனக்காக்க EPS OPS விஜயபாஸ்கர் எல்லாம் துடிப்பாக இருக்காங்களே நிச்சயம் நாங்கள் காரோணவு குட் பை சொல்லுவோம் 90%மக்கள் நிஜமாவே வீட்டியவிட்டு நகராமல் அடஞ்சிக்கிடக்றோம் மீறியும் வந்தால் எங்கள் தலைவிதி , வரக்கூடாது என்றுதான் கடவுளைவேண்டுகிறோம் தியானம் செய்றோம் ஷஷ்ட்யகவசம் ஹனுமான் சாலிசா விநாயகர் அகவல் சொல்றோம் இறைவனையே நம்பும் எங்களை இறைவன் கைவிடுவதே இல்லீங்க
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202004:46:37 IST Report Abuse
ocean kadappa india . கொடூரமான கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக நாட்டுக்கு நாடு பினபற்றும் முறைகளை
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202004:41:20 IST Report Abuse
ocean kadappa india கொரோனா என்ற பெயரில் உலகெங்கம் பரவியுள்ள நோய்க்கு மூலம் சீனா. அங்கே அந்த நோய் முதலில். வவ்வால் களில் இருந்து தொடங்கியதாக கூறப்பட்டது. உலகினர் இந்த நோய் பாதிப்பால் சீனா பக்கம் கவனத்தை திருப்பவே இப்போது சீனாவில் உள்ள ஹுவான் என்ற இடத்திலுள்ள ஒரு இறைச்சி கூடத்தில் இருந்து கோரோனா வைரஸ் கிளம்பியதாக மாற்றி கூறி அந்த வைரஸ்களை ஓழிக்க ட்ரோன்களில் ஊரெங்கிலும் மருந்து தெளிக்கின்றனர். உலகில் எல்லா தேசங்களிலும் இறைச்சி கூடங்கள் உள்ளனவே. அங்கெல்லாம் தோன்றாத இந்த நோய் சீனாவில் மட்டும் எப்படி தோன்றியது. உலகை அழிக்க கொடுமையான வைரஸ் நோய்களை பரப்பியது மட்டுமின்றி அதனை மறைக்க சீனாவினர் முன்னுக்கு பின் முரண்பாடான செய்திகளை பரப்பி வருகின்றனர். இவர்கள் செய்யும் அட்டூழியங்களில் இவர்களே அழிந்து போவதுடன் ஒரு நாள் உலக வரை படத்தில் இருந்து சீனா காணாமல் போகும். இந்தியாவில் இறைச்சி கூடங்கள் இல்லையா. இங்கே எல்லாம் தோன்றாத கொரோனா வைரஸ் எப்படி சீனாவின் இறைச்சி கூடத்தில் மட்டும் தோன்றியது. இந்த வியாதி ஒருவரை ஒருவர் தொட்டால் தொற்றும் என்று பயமுறுத்தி விட்டு அவர்கள் ஊரடங்கு எதுவுமின்றி ஆகாயத்தில் மருந்து தெளிக்கின்றனர். அதற்கு சில இந்திய மருத்தவர்கள் அது காற்றில் பரவாது என்கின்றனர். காற்றில் பரவாது என்றால் அது காற்றில் பரவுவதாக சொல்லி நோய் பரவுநலுக்கு முக்கிய காரணமான சீனாக்காரன் எதற்கு ட்ரோனில் மருந்து தெளிக்கிறான். வைரஸ் ஓழிப்புக்கு பின் பற்றும் முறைகளில் இடத்திற்கு இடம் மாற்றுகின்றனர். இந்தியவில் ஒருவரை ஒருவர் தொட்டாலே இந்த நோய் ஒட்டும் என்று சொல்லி ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர். மத்திய அரசு இந்தியாவில் உள்ள சீன வெளியுறவு துறை செயலரிடம் இது பற்றி விளக்கம் கேட்க வேண்டும். ஊரடங்கை மறு பரிசீலனை செய்யலாம். நமது மைய அரசின் கண்காணிப்பில் நாடெங்கிலும் உள்ள இறைச்சி கூடங்களில் ட்ரோன்களில் கொரோனா அழிப்பு மருந்துகளை தெளிக்கலாம். இறைச்சி கூடங்களில் பணியாற்றுவோர்களுக்கு இறைச்சிகளை நாட்பட வைத்திருக்காமல் அவைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி போதிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை தெளிக்கவும் ஆணையிடவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X