பொது செய்தி

இந்தியா

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த திருமணம்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Coronavirus, Lockdown, FacetimeApp, VideoConferencing, Telephone, UP, Couple, Weds, Telephone, கொரோனா வைரஸ், ஊரடங்கு, பேஸ்டைம்செயலி, திருமணம், வீடியோ கால், உபி

ஹர்டாய்: கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.


latest tamil news


திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால், வெளியே வரமுடியாத சூழ்நிலையில், இரு வீட்டாரும் தங்களது வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மற்றும் பேஸ்டைம் என்னும் வீடியோ கால் செயலி மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, ஹமீத்-மெஹபீன் ஆகிய இருவரும் அவரவர் வீட்டில் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தனர்.


latest tamil news


வீடியோ கான்பெரன்சிங் மூலம் திருமணம் நடைபெற்று, அந்தந்த குடும்பத்தினர் தங்கள் வீடுகளிலேயே சிறு கொண்டாட்டங்களை நிகழ்த்தினர். இது குறித்து ஹமீத் கூறுகையில், நாடு முழுவதும் ஊரடங்கு நிகழ்வு குறித்து இரு குடும்பத்தாரும் விவாதித்தோம். திருமணத்தை ஒத்திவைக்க வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கப்பட்டு, இயல்பு நிலை வந்தபிறகு, ஆடம்பரமாக நிகழ்ச்சி நடத்தலாம் எனவும் முடிவு செய்து, தற்போது பேஸ்டைம் செயலியின் வீடியோ கான்பெரன்சிங் மூலம் திருமணம் செய்துக்கொண்டேன். இயல்பு நிலைக்கு பின்னர், மெஹபீனை, வீட்டிற்கு அழைத்து வருவேன், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-மார்-202017:44:27 IST Report Abuse
Endrum Indian மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத்????இது தான் துபாய் + கேரளா அதே வீடியோ முஸ்லீம் திருமணம் ரெண்டு வருஷம் முன்னாடி நடந்துச்சே. போரடிச்சுச்சா வாட்சப்பில் தலாக் தலாக் தலாக் இது தானே இவனுங்க இப்போதைய வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-மார்-202015:19:49 IST Report Abuse
வெகுளி மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..... ஆனா மெஹந்தி சிவக்கலையே....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-மார்-202013:59:08 IST Report Abuse
A.George Alphonse This is totally an unwanted and unwarranted news at this critical time of our country.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X