பொது செய்தி

தமிழ்நாடு

நாளிதழ் விநியோகத்திற்கு தடையில்லை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
நாளிதழ், விற்பனை, சென்னைமாநகராட்சி,  கமிஷனர், பிரகாஷ்

சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நாளிதழ்கள் விநியோகத்திற்கு எவ்வித தடையும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி சார்பில் டுரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை, ரிப்பன் அலுவலகத்தில் தொடங்கி வைத்த பின்னர் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: நாளிதழ்களை விநியோகத்திற்கு எந்தவித தடையும் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டுரோன் மூலம், கிரிமி நாசினி தெளிப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை டாக்டர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது, ரயில் நிலையம், விமான நிலையங்களில் சிக்கி தவித்தவர்களை 20 முகாம்களில் தங்க வைத்து அவர்களை கண்காணித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.22 ஆயிரம் இல்லங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன.


latest tamil news



144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்த பிறகு பெரும்பாலான இடங்களில் கூட்டம் இல்லாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. அண்ணா பல்கலை மூலம் உருவாக்கப்பட்ட இந்த டுரோன் தொழில்நுட்பம் மூலம், கூட்டம் அதிகம் இருக்கும் மார்க்கெட், குடிசை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முன்னோட்டம் நடைபெற்றது.

சமைத்த உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை தொடரும். தனியார் நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவை மளிகை பொருட்களை வீடுகளுக்கு வந்து டோர் டெலிவரி செய்வதில் தடையில்லை. தொலைபேசி மூலமாகவோ, இணையம் மூலமாகவோ மளிகை பொருட்களை மக்கள் ஆர்டர் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
26-மார்-202019:27:40 IST Report Abuse
ocean kadappa india கொரோனா கொசு மூட்டையிலிருந்தும் பரவும்.குரு முட்டையிலிருந்தும பரவும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
26-மார்-202017:30:15 IST Report Abuse
Tamilan தடை செய்ய வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
26-மார்-202015:55:05 IST Report Abuse
pradeesh parthasarathy . பத்திரிகை விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X