பொது செய்தி

இந்தியா

ஊரடங்கின் போது சாலையில் நடமாடிய 2,531 பேர் கைது

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
கேரளா, கைது, ஊரடங்கு, kerala, lockdown, arrest,

திருவனந்தபுரம்: கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல், வெளியில் நடமாடிய 2,531 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுமென பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம்(மார்ச் 24) நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து வெளியில் வர வேண்டாமென போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் , சாலைகளில் உலா வந்த 1,636 பைக்குகளை பறிமுதல் செய்ததோடு, 2,531 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் வாகன பதிவை ரத்து செய்வதுடன், அடுத்த முறை சிக்கினால் பாஸ்போர்ட் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.


latest tamil news



இதுவரை ஊரடங்கை பின்பற்றாமல் வெளியில் நடமாடியதாக 3,612 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 351 வழக்குகளும், கொல்லம் மாவட்டத்தில் 276 வழக்குகளும் பதிவாகின. காசர்கோடு மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 10 வழக்குகள் பதிவாகின. கேரளாவில் இறுதிச்சடங்கில் 10 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தனம் திட்டாவில் உள்ள சர்ச்சில் நடைபெற்ற இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனை அடுத்து பத்தனம்திட்டா சர்ச் பிஷப் மற்றும் சர்ச் நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-மார்-202003:04:00 IST Report Abuse
 nicolethomson சுத்தமாக படிப்பறிவில்லாதவர்கள் வாழும் மாநிலம் அது , பெங்களூரிலும் சுற்றி திரிவதுதான் வெட்கக்கேடு
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
26-மார்-202019:45:44 IST Report Abuse
ocean kadappa india கேரளாவில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியதாக வைரஸ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
SIVA G india - chennai,இந்தியா
26-மார்-202016:40:22 IST Report Abuse
SIVA G  india இதே கடுமையை குடித்து விட்டு எந்த வாகனம் ஓட்டினுலும் எப்போதும் பின்பற்றிலால் பலர் உயிர் பலியாவதும், முடமாவதும் தடுக்கபடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X