பொது செய்தி

இந்தியா

கொரோனா போர் வீரர்களின் மனதிடத்தை உடைக்காதீர்கள்: ஹர்ஷ்வர்தன்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
HarshVardhan, Demoralize, CoronaWarriors, CoronaVirus, UnionMinister, HealthMinister, ஹர்ஷ்வர்தன், மனசோர்வு, கொரோனா வைரஸ், போர், போர்வீரர்கள், சுகாதார அமைச்சர்

புதுடில்லி: கொரோனா வைரசிற்கு எதிரான போரில் போர் வீரர்களாக கருதப்படும் டாக்டர்கள் உள்ளிட்டவர்களின் மனதிடத்தை உடைக்காதீர்கள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானது. இதனை பொருட்படுத்தாமல், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை போலீசார் லத்தியால் அடித்து காயப்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. காரணமில்லாமல் வெளியே வரும் நபர்கள் மட்டுமல்லாமல், மருத்துவ சேவை செய்ய வாகனத்தில் செல்பவர்களையும் போலீசார் தாக்குவதாக புகார் எழுந்தது.


latest tamil newsஇது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் போராடுவது நமது தேசிய பொறுப்பாகும். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எங்களது போர்வீரர்கள். ஆனால் சிலர் அவர்களுக்கு எதிரான மனநோய் மற்றும் பாகுபாட்டை கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. தயவு செய்து எங்கள் கொரோனா போர் வீரர்களின் மனதிடத்தை உடைக்காதீர்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-202016:18:02 IST Report Abuse
Venkat, UAE விவசாயிகளை மட்டும் கொரோன தாக்காதா? ஒரு விவசாயி நோய்த்தொற்றால் அவதிப்பட்டால் அடுத்த விவசாயிகளுக்கும் பராவதா? உயிர் முக்கியமா இல்லை பயிர் முக்கியமா?
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
26-மார்-202014:47:25 IST Report Abuse
Ab Cd விவசாயிகளை பற்றி இந்த அரசு கவலை கொண்டுள்ளதா? 21 நாட்கள் பயிரை பார்க்காவிட்டால் , தண்ணீர் பாய்ச்சாவிட்டால், பராமரிக்காவிட்டால் விவசாயம் என்னாகும். இதனால் விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை , வரும் நாட்களில் உணவு தட்டுபாடு நாடு முழுவது பாதிக்கும் . சரியான திட்டமிடல் இல்லை
Rate this:
Share this comment
Cancel
26-மார்-202014:38:15 IST Report Abuse
Suresh Kumar G Yesterday itself Dinamalar indicated that the classification should be there. if possible, please issue separate ID cards with different colour ropes for Medical staff, essential services, Paper boys and milk vendors for identification to police. Others who have not wear must be punished.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X