கேரள அரசின் அதிகாரத்தை வலுப்படுத்த அமலாகிறது புதிய சட்டம்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 112 பேர் சிகிச்சையில் உள்ளனர்; 76,542 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில், 532 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை, 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.


latest tamil news



வைரசால் பாதிக்கப்பட்டதில், 91 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 8 பேர் வெளிநாட்டினர். மீதமுள்ள 19 பேர் இவர்களுடனான தொடர்பில் இருந்தவர்கள்.


அரசுக்கு கூடுதல் அதிகாரம்!


கேரளாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, 'கேரள எபிடமிக் டிஸீசஸ் ஆடினஸ் - 2020' என்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த, அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும், புதிய சட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நேற்று மாலை (25ம் தேதி) அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
பொதுமக்களும், தனித்த குழுக்களும், தனி நபர்களும் நடத்தும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த, அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்கும்.


2 ஆண்டுகள் சிறை


விதி மீறுபவர்கள் மீது, போலீஸ் நேரடியாக வழக்குப்பதிய முடியும். இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையோ, 10 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க முடியும். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மாநில எல்லைகளை மூட முடியும். பொது இடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதை தடுக்க முடியும்.


latest tamil news



அரசு அலுவலகங்கள், கல்வி சாலைகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், கடைகள், உணவகங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். இந்த சட்டம் குறித்து கேரள கவர்னர் ஆரிப் கானிடமும் இன்று (26ம் தேதி) ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



latest tamil news



'கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை, மக்கள் மதித்து செயல்படுகின்றனர். இருந்தும், கேரள முதல்வர் தனது அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொள்ள, இம்மாதிரியான சட்டங்களைக் கொண்டு வருகிறார். இதனால், வரும் காலத்தில் கேரள அரசு சர்வாதிகாரத் தன்மையை அடைய வாய்ப்புள்ளது' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மார்-202007:25:32 IST Report Abuse
Natarajan Ramanathan வெள்ளிக்கிழமை மசூத்திகளில் கூட்டும் ...களை கட்டுப்படுத்த இந்த பினாராய் ஏதாவது சட்டம் கொண்டுவருமா
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-மார்-202002:58:38 IST Report Abuse
 nicolethomson வெளிமாநில மருத்துவத்திற்கு அனுப்பி விட்டு கம்மியா கணக்கு காட்டுற பாரு , உன்னோட இந்த புத்தியை எது வெச்சு அடிச்சாலும் தாங்கும் பெங்களூரில் 9 , தேனியில் 4 என்று எல்லா ஊரிலும் வென்டிலேட்டர்களை ஆக்ரமிப்பு செய்துள்ளது யாரு என்று பொதுமக்களே புரிஞ்சுக்கோங்க
Rate this:
Share this comment
Cancel
வலதுசாரி மனிதன் ஒழுங்கா சட்டம் ரெடி பண்னிட்டு சுட்டுகொல்லகூட செய்ங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X