பொது செய்தி

இந்தியா

ரூ.1.70 லட்சம் கோடி சலுகை திட்டங்கள்: நிர்மலா அறிவிப்பு

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
coronavirus, lockdown,Nirmala, nirmalasitharaman, FMNirmala, FMnirmalasitharaman,  கொரோனாவைரஸ், நிர்மலாசீதாராமன், நிர்மலா, நிதியமைச்சர் நிர்மலா,

புதுடில்லி: கொரோனா வைரஸ் மற்றும் அதனை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ.1.76 லட்சம் கோடி மதிப்பிற்கு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் செலுத்த வேண்டிய 24 சதவீத பி.எப்., தொகையை 3 மாதங்களுக்கு மத்திய அரசு செலுத்தும்.


latest tamil news




பி.எப்., நிதியில் அட்வான்ஸ்


ரூ.15 ஆயிரம் குறைவான சம்பளம், 100 க்கும் குறைவானோர் பணிபுரியும் நிறுவனத்தில், தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய 3 மாத பி.எப்., தொகையை மத்திய அரசு செலுத்தும். இதன் மூலம் 4.8 கோடி பேர் பயன்பெறுவார்கள்.

பி.எப்., நிதியில் இருந்து 75 சதவீத நிதி அல்லது 3 மாத சம்பளம், இதில் எது குறைவோ அதனை தொழிலாளர்கள் முன்பணமாக பெற்று கொள்ளலாம். முன்பணத்தை திருப்பி செலுத்த தேவையில்லை. இதற்காக சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வரும்.

கட்டட தொழிலாளர்களுக்காக சிறப்பு நிதி (ரூ.31 ஆயிரம் கோடி) யில் இருந்து கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தேவையான உதவியை மாநில அரசுகள் செய்யலாம். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிதியை அவர்களின் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வலதுசாரி மனிதன் வெளிநாட்டில் இருந்து வந்த பயலுவழ தூக்கி தனிமைபடுத்தாம, வாயில நல்லா
Rate this:
Cancel
26-மார்-202018:54:58 IST Report Abuse
நக்கல் இரண்டு மாதங்களுக்கு சுமைகளை நன்றாக குறைத்துவிட்டு, வேண்டுமென்றால் பிறகு நிலைமை சரியானவுடன் ஈடுகட்டிக் கொள்ளலாம்.... வேறு வழியில்லை....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-மார்-202017:53:57 IST Report Abuse
Bhaskaran தொழிலாளி ஓய்வுபெற்ற பின் அவரது காலத்தை கழிக்க உள்ளது பி.எப் பணம் .
Rate this:
Balaji - Chennai,இந்தியா
26-மார்-202018:21:15 IST Report Abuse
Balajiஇன்னைக்கி உசுரு இருக்கான்னு பாரு நாயனா. அதுக்கு வேணும்னா எடுத்து செலவு பண்ணு மோதலோ. மே வரைக்கும் இருப்போமான்னு தெரில மேதாவி மாறி குத்தம் சொல்லிக்கிட்டு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X