ஊரடங்கு போதாது; தீவிர தடுப்பு நடவடிக்கை தேவை: உலக சுகாதார அமைப்பு

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

ஜெனிவா: உலக அளவில், 4 லட்சம் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கொலைவெறியை சமாளிக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்நிலையில், 'கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்ப, வெறும் ஊரடங்கு மட்டும் போதாது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஆனால், ஊரடங்கு அறிவித்தால் மட்டும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது.


latest tamil news



ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் கண்டிப்பாக இருக்காது. இது மிகப்பெரிய வாய்ப்பு. ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி, அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பு பரவும் நிலை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு சுகாதாரத் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.


latest tamil news



உலக அளவில் கொரோனா வைரசால், 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே, இந்த ஊரடங்கு வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் துரிதகதியில் செயல்பட்டு கொரோனா வைரசை அழித்தொழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-மார்-202005:34:41 IST Report Abuse
meenakshisundaram போலீஸ் லத்தி சார்ஜ் செய்தது சரியே
Rate this:
Share this comment
Cancel
Narayanan Thannappa - Canton,Detroit,யூ.எஸ்.ஏ
26-மார்-202023:04:08 IST Report Abuse
Narayanan Thannappa பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை , பாதிக்கப்பட்டபகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கைநடவடிக்கை என்னவென்று கூறும் ஐயா.உங்களுடைய அமைப்பு இருக்கும் சுவிட்ஜ்ர்லாந்து நாட்டில் இந்த நோயினால் 11 ,712 நபர்கள் பாதிக்கப்பட்டு 191 நபர்கள் மார்ச் 26 ந் தேதிவரை இறந்துள்ளார்கள்.உமது அமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன? வெற்று பேச்சுக்கு இதுவா நேரம்.பொறுப்புடன் செயல்படுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
26-மார்-202021:52:03 IST Report Abuse
venkatan இது, மத சிறுபான்மையினரும்,இனமான காவலர்களும்,மனித உரிமை மீறல் பற்றிய பந்த் இல்லேப்பா, பயங்கரவாதிகளுக்கெல்லாம் கட்டியம் கூறும், கொல்லும் கோவிட் பற்றி சமூக விலகல் மட்டும் போதாது..அதாவது பந்த் மட்டும் போதாது,நோயாளி கண்டுபிடிப்பு,தனிமை,சிகிச்சை,தொடர்பு பற்றி பேசுகிறார்.இதில் அரசியல் பண்ண நினைத்தால் வரும் எலெக்ஷன்ல ஓட்டு போட ஆளே இருக்காதுன்றார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X