அப்பாடா., முதல் தடவையா மத்திய அரசுக்கு ராகுல் பாராட்டு

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (80)
Share
Advertisement

புதுடில்லி: கொரானா ஒழிப்பில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை சிறப்பாக உள்ளதாக காங்., மாஜி தலைவர் ராகுல் பாராட்டி உள்ளார்.



latest tamil news


உலகம் முழுவதும் கொரோனாவால் 4 .5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய , மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா அளித்த பேட்டியில் ;
அரசு சார்பில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். கொரோனாவால் மக்கள் வெளியே வர முடியாத நிலையால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை வழங்கப்படும். ஜன்தன் வங்கிகணக்கு பெண்களுக்கு மாதம் ரூ.500 வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு சமையல் காஸ் இலவசம். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ். முதியவர், மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


latest tamil news



பேட்டி அளித்த சில நிமிடங்களில் காங்., மாஜி தலைவர் ராகுல்; மத்திய அரசின் முதல் நடவடிக்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என பாராட்டி உள்ளார். விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இந்தியா கடன்பட்டிருக்கிறது. என்றும் தனது டுவிட் பதிவில் கூறியுள்ளார்.
மத்திய அரசின் எந்த ஒரு நடவடிக்கையையும் ராகுல் விமர்சித்து குறை கூறி வருபவர். இந்நிலையில் ராகுல் மத்திய அரசை முதன் முறையாக பாராட்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



சோனியாவும் பாராட்டினார்


காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்காக, அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும், காங்கிரஸ் தலைவராக எனது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குகிறோம். வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால், நம்நாடு சிக்கலான மற்றும் சவால்களை திறம்பட எதிர்கொண்டு வருகிறது. நாம் அனைவரும், மனித நேயத்துடன் நாட்டின் நலனுக்காக பாடுபட்டுவரும் அனைத்து பணியாளர்களையும் பாராட்டி மதிப்பளிக்க வேண்டிய நேரம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202007:20:19 IST Report Abuse
S B. RAVICHANDRAN சைனா கொரோன வந்ததால் பப்புவுக்கு அறிவு. அடேய் கை குலுக்காத.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
27-மார்-202006:40:02 IST Report Abuse
siriyaar சீரியஸ் அதனால்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-மார்-202005:47:04 IST Report Abuse
 Muruga Vel கை கொடுக்கிறார் ...வணக்கம் தானே சொல்லணும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X