வந்துவிட்டது கொரோனா ஓட்டல்: சுவிட்சர்லாந்தில் அறிமுகம்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
கொரோனா, சொகுசு ஓட்டல், சுவிட்சர்லாந்து, coronovirus, corono, Hotel, switzerland

ஜெனிவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த சொகுசு ஓட்டல் கொரோனாவை மையப்படுத்தி, தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே தீர்வாக கருதப்படுகிறது. இதனை சரியாக வாய்ப்பாக கருதிய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள லே பிஜோ என்னும் சொகுசு ஓட்டல் , தனது முழுவதும் தானியங்கி மயமாக்கப்பட்ட ஓட்டலில், கொரோனா பரிசோதனை, டாக்டர்கள் மற்றும் 24 மணி நேர நர்ஸ் கண்காணிப்புடன் கூடிய புதிய பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.


latest tamil newsதனி சமையலறை, உடற்பயிற்சி கூடம், மசாஜ் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மனிதர்களின் உதவியின்றி சொகுசு ஓட்டலின் பிரத்யேக ஆப் முலம் பெற்றுகொள்ளலாம். கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றுடன் 14 நாட்கள் வரை தங்குவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 58.33 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஓட்டலின் சி.இ.ஓவும், துணை நிறுவனருமான அலெக்ஸாண்டர் ஹப்னர், கொரோனா பாதிப்பில் இருந்து விலகியிருக்க, சொகுசு அறைகள் வேண்டுமென சில வாடிக்கையாளர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. எனவே விருந்தினர்களை ஈர்க்க தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் குறித்து விளம்பரப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இரண்டு விசாரணை மட்டுமே வந்தது. அடுத்து நான்கு, ஐந்து, ஆறு என அதிகரித்துள்ளது' என்றார்.
ஒருநாள் இரவு கூட தங்கலாம் என்றாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இரு வாரங்கள் மற்றும் இரண்டு மாதங்களை தேர்வு செய்வதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானவர்கள் ஓட்டலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் .லேசான அறிகுறியுடன் இருப்பவர்கள் தங்க அனுமதிக்கப்படுவர்' எனவும் ஹப்னர் தெரிவித்தார்.

இதேபோன்று ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளில் உள்ள சொகுசு ஓட்டல்களும் கொரோனாவை மையப்படுத்தி பேக்கேஜ்களை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
27-மார்-202010:01:22 IST Report Abuse
Gopi இதையே சிறு மாற்றங்களுடன் அரசுடன் இணைத்து ஆராவாரம் ஆடம்பரம் இல்லாமல் மிகப்பெரிய அளவில் அதிக ஏழை எளிய மக்களுக்கு முகாம்களை உருவாக்கி தந்தால் அது சேவை. இது வியாபாரம்
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202006:21:10 IST Report Abuse
இவன் இதுக்கு பேரு எரியிற வீட்ல புடுங்குனது இல்ல, மருத்துவர் கொரோன டெஸ்ட் கு அதிக பணம் கேட்ட, mask கடை காரன் அதிக பணம் கேட்குறது தான் எரியிற வீட்ல புடுங்குறது
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202005:40:41 IST Report Abuse
ocean kadappa india உலக நாடுகளில் மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. ஒருவருக்கொருவர் இடையில் உள்ள இடைவெளி வெகுவாக குறைந்து விட்டது. ஒருவர் விடும் மூச்சு காற்று பேசும் போது வெளிப்படும் எச்சில் தெறிப்பு அவ்வளவு நெருக்கத்தில் அடுத்தவர் மேல் படுகிறது. கூட்டங்களில் ஒருவரை ஒருவர் போதிய இடைவெளி இன்றி நெருக்கியடித்து நகர முடியாமல் விழி பிதுங்க முழித்து நிற்கின்றனர். மனித வாழ்க்கையில் சற்றைய தனி மனித சமுக விலகல் முறை இப்போது மிகவும் மிகவும் தேவை என்பதை சுய ஊரடங்கு உணர்த்தி விட்டது. இன்றைய மனித நெருக்கத்தின் மறைமுக காரணம் தீண்டாமை என்ற பயம். ஒருவரை ஒருவர் விட்டு சற்று விலகி நிற்பது ஆதிகால சுகாதாரமான முறை. இடையில் அது தவறு என சட்டம் போட்டனர். பழைய முறை இப்போது நடை முறைக்கு வந்து விட்டது. மற்றபடி அது தீண்டாமையல்ல. சற்றைய சமுதாய தனி மனித விலகல் முறை சுகாதாரமான நோய் தடுப்பு முறை. மாந்தருக்கு மகிழ்ச்சி தரும் முறை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X