கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ட்ரோன்களை சீனா பயன்படுத்தியது எப்படி?

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ட்ரோன், சீனா, கொரோனாவைரஸ், கொரோனா, corona, coronavirus, drone, china,

பீஜிங்: கொரோனா பாதிப்பு நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி வருகிறது. நமது கை குலுக்கும் விதம் துவங்கி நமது பிள்ளைகள் பள்ளி செல்லும் போக்கு வரை அனைத்தும் மாறிவிட்டன.

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் அனைவரும் கண்ணீர் மல்க கதறினாலும் சினிமா ஸ்டார்கள் கைகூப்பி வேண்டுகோள் வைத்தாலும் மருந்துவர்கள் நாளுக்கு நாள் போராடினாலும் கொரோனா தன் கோர முகத்தை காட்டியபடியே உள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் விலங்கு இறைச்சி மூலம் பரவத் துவங்கிய கொரோனா மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் உயிரை பலி வாங்கியது. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் ஒன்றான சீனா பல அதிநவீன வழிமுறைகளைக் கையாண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து சீனாவை விடுவித்தது.

இதில் சீனா கையாண்ட முக்கியமான தொழில்நுட்ப கருவி ட்ரோன். இதன்மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்துகள் தெளிக்க முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் காட்டியது. இதனால் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை எவ்வாறு சாத்தியப்பட்டது எனப் பார்ப்போமா?


latest tamil news
சீனாவில் இதற்குமுன்னர் ட்ரோன்கள் விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்பட்டன. அது ஏரியல் ஸ்பிரே எனப்படும். அதுவே தற்போது கொரோனாவைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பரவ முக்கிய காரணம் இருமல், தும்மல் காரணமாக எச்சில் காற்றில் தெளிப்பதாகும். பாதிக்கப்பட்டவரது எச்சில், கபம் உள்ளிட்டவை பொது இடங்களில் உள்ள கதவு கைப்பிடிகளில் பட்டு அதனை மற்றொருவர் தொடும்போது பரவும். ட்ரோன் பொது இடங்களில் மருந்து தூவுவதால் இந்த பாதிப்பு கணிசமாகக் குறையும்.

சிலிண்டரில் நிரப்பப்பட்ட மருந்தை தூய்மை பணியாளர்கள் கைகளால் ஸ்பிரே செய்வதைவிட ட்ரோன் மூலம் பொது இடங்களில் ஸ்பிரே செய்வது 50 மடங்கு நல்ல பலனைத் தருமென எக்ஸ்.ஏ.ஜி ட்ரோன் நிறுவனத் தலைவர் ஜஸ்டின் கோங் தெரிவித்துள்ளார்.

ட்ரோன்களை சரியாகப் பயன்படுத்த சீனாவில் பல மாநகராட்சிகளின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. ட்ரோன்களை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மட்டுமே இயக்க முடியும். இதற்கான ஆப்ரேட்டர்கள் ஆங்காங்கு பணியமர்த்தப்பட்டனர். கைகளால் மருந்து தெளிப்பவர்களுக்கு மத்தியில் ட்ரோன் ஆப்பரேட்டர்களுக்கு பாதிப்பு கணிசமாகக் குறைகிறது.

தற்போது இந்தியாவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் கொரோனா மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை சரியாகப் பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது உறுதி.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-202001:38:04 IST Report Abuse
Tamilan சீனா, ஹூபே மற்றும் வுஹாநில் என்ன செயதஹதோ அது பற்றி இந்தியா யோசிக்கவேண்டியதே கிடையாது . தேவையில்லாமல் ஏன் குழப்பத்தை ஏற்படுத்துவானேன் ?.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-202001:36:50 IST Report Abuse
Tamilan சீனா, ஹூபே மற்றும் வுஹானை தவிர, மற்ற இடங்களில் என்ன செய்ததோ அதை இந்தியாவில் செய்யலாம் . அவர்கள் புதிதாக ஒன்றும் செய்யவில்லை . செய்ததில் பிரதானமான ஒன்று , இந்தியாவை தவிர உலக வரலாற்றில் இல்லாத ஒன்றான தீண்டாமையை, தீண்டாமையின் மிக பெரிய உருவை சட்டமாக்கியதுதான். ஒரு சிலவாரங்களுக்காவது சட்டமாக்கியது மட்டுமல்ல. யாருமே எதிர்க்க முடியாத கண்டிப்பாக செய்தெ ஆகவேண்டிய அவசரகால சட்டமாகியதுதான் முக்கிய காரணம் . இவர்களிடம் இந்தியா கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை . அரசியல் சட்ட மூடர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட அரசுகள் மற்ற நாடுகளிடமிருந்து காப்பியடிக்க வேண்டிய கட்டாயம் . இந்தியா, காலம் காலமாக மற்ற நாடுகளிடம் கையேந்துவதற்கு அரசியல் சட்டமும் அரசியல் சட்ட மூடத்தனமும்தான் காரணம் .
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
26-மார்-202019:59:53 IST Report Abuse
ocean kadappa india முதலில் வவ்வாலகள் குடி இருக்கும் இடமாக பர்ர்த்து ட்ரோன்களை இயக்கி மருந்துகளை தெளிக்கலாம். கொரோனாவின் பிறப்பிடத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீனாக்கரன் அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறான். விலங்கின் இறைச்சி என்றால் எந்த விலங்கின் இறைச்சி. அதனை இறைச்சியாக பயன்படுத்தியவர்கள் யார். இறைச்சியை வைரஸ் கிளம்பும் அளவுக்கு நாறும் கிடப்பில் வைத்திருந்தவர் யார். அந்த நபரை பிடித்தார்களா. தண்டனை வழங்கினார்களா. ஒரு விவரத்தையும் சொல்ல வில்லை. சீனாக்காரன் மூடு மந்திரக்காரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X