21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு காங்., தலைவர் சோனியா ஆதரவு

Updated : மார் 28, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
21 நாள், ஊரடங்கு,உத்தரவுக்கு,காங்., தலைவர், சோனியா,ஆதரவு

புதுடில்லி :பிரதமர், நரேந்திர மோடி அறிவித்துள்ள, 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு, காங்., தலைவர், சோனியா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படியும், கடன் வசூலிப்பு நடவடிக்கையை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், பிரதமர், மோடிக்கு, சோனியா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவை, பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

இது குறித்து, பிரதமருக்கு, காங்., தலைவர், சோனியா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆக, 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதற்கு நன்றி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், இந்த உத்தரவை வரவேற்கிறேன். கொரோனா வைரசை தடுப்பதற்காக, மத்திய அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.

கொரோனா வைரஸ், நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுதும் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், ஏழைகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆனாலும், நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, கொரோனா வைரசால் ஏற்பட்டு வரும் சவாலை முறியடிக்க தயாராகி உள்ளனர்.

அதேநேரத்தில், டாக்டர்களுக்கு, அவர்களது வீட்டு உரிமையாளர்களால் தொல்லை ஏற்படுவ தாக புகார்கள் வருகின்றன. இது போன்ற நெருக்கடியான நேரங்களில், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு, நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும். கடன் வசூலிப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி, வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-மார்-202021:28:39 IST Report Abuse
அசோக்ராஜ் இத்தாலியில் வசிக்கும் தன் உறவுகளை மோடியுடன் ரகசிய டீல் போட்டு இந்தியாவுக்கு பாதுகாப்பாக கொண்டுவந்திருப்பாள். விஷயம் வெளியில் வராமல் பீஜேபியும் பார்த்துக் கொள்ளும்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
27-மார்-202021:07:53 IST Report Abuse
bal இந்த குடும்பத்தால்தான் CAA எதிர்ப்பு வன்முறையானது....எங்கே பார்த்தாலும் இன்னும் முஸ்லிம்கள் தொழுகைக்கு போகின்றனர்.....இப்போதுகூட...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
27-மார்-202021:06:52 IST Report Abuse
bal நீ ஆதரிக்கலேன்னா கூட நல்லாவே நடக்கும்...இங்கு ஒருத்தர் தன் குடும்ப தொலைக்காட்சியில் மக்களுக்கு அறிவுரையும் இரங்கலும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்...ஏன் குடும்ப சொத்து திருடியதுதானே. மக்களுக்கு அள்ளி வீசவேண்டியதுதானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X