பொது செய்தி

இந்தியா

கொரோனா மருத்துவமனைகள்தனி மருத்துவமனைகள் கட்டும் பணி துவக்கம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, 17 மாநிலங்களில், தனி மருத்துவமனைகள் கட்டும் பணி துவங்கியுள்ளது' என, மத்திய சுகதாரத்துறை அமைச்கம் தெரிவித்துஉள்ளது.

டில்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலர், லாவ் அகர்வால் கூறியதாவது:இந்தியாவில், கொரோனா, சமூக பரவலாக மாறியுள்ளதற்கான சிறிய அறிகுறி கூட இல்லை. கொசுக்களால், கொரோனா பரவுகிறது என்பது தவறு.நாம், சமூக விலக்கலை, 100 சதவீதம் முழுமையாக கடைப்பிடித்தால், கொரோனா பரவலை ஒழித்து விடலாம். ஊரடங்கில், வீட்டுக்குள்ளேயே மக்கள் இருந்தாலே போதும், கொரோனா கட்டுப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.'தொழுகையை ரத்து செய்க'கொரோனா பரவல் காரணமாக, உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள மசூதிகளில், அன்றாட தொழுகை, வெள்ளிக்கிழமை தொழுகை ஆகியவற்றை ரத்து செய்யுமாறு, அலிகார் மாவட்ட தலைமை இமாம், மவுலானா முகமது காலித் ஹமீத் கேட்டுக் கொண்டுள்ளார்.''மேற்கு வங்கத்தில் உள்ள சர்ச்களில், பிரார்த்தனை கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,'' என, ரோமன் கத்தோலிக ஆர்ச்பிஷப், தாமஸ் டி சவுசா கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியா கோரிக்கைசிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுதோறும் மார்ச், 31ம் தேதி, சந்தித்து பேச வேண்டும்.

இந்தக் கூட்டம், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மாறி மாறி நடப்பது வழக்கம்.இந்தஆண்டு, டில்லியில், இந்த கூட்டம் நடக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலால், இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என, இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு, பாகிஸ்தான் இன்னும் பதில் அளிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X