பொது செய்தி

இந்தியா

செய்தி துளிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement
செய்தி துளிகள்

எல்லையில் குழப்பம்
ஐதராபாத்: சொந்த ஊருக்கு திரும்ப முயன்றவர்களால், ஆந்திரா - தெலுங்கானா எல்லையில், பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல, தெலுங்கானா அரசு, 'டோக்கன்' வழங்கி வருகிறது. ஆனால், அவர்களை அனுமதிக்க ஆந்திர போலீசார் மறுத்துஉள்ளனர்.'இது தொடர்பாக தகவல் ஏதும் வரவில்லை' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், எல்லையில் குழப்பத்துடன் காத்திருந்தனர். இவர்களை மட்டும் அனுமதிப்பதாகவும், இதற்கு மேல், டோக்கன் கொடுக்க வேண்டாம் என்றும், தெலுங்கானாவுக்கு, ஆந்திரா கூறியுள்ளது.
2 நாட்களாக நடைபயணம்

புதுடில்லி: முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், பொது போக்குவரத்து முழுதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், டில்லியில் தினக் கூலிக்கு வேலை பார்த்து வந்தவர்கள், உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர். டில்லியில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள தன் கிராமத்துக்கு, ஒரு கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன், ஒரு தொழிலாளி, நடை பயணத்தை துவக்கிஉள்ளார். 'இரண்டு நாட்கள் நடந்து சென்றால்தான், கிராமத்தை அடைய முடியும்' என, அவர் கூறியுள்ளார்.

நடந்தவர்கள் மீட்பு

சண்டாலி: உத்தர பிரதேச மாநிலத்தில், வாரணாசிக்கு அருகில் இருந்து, 335 கி.மீ., தொலைவில் உள்ள சமஸ்திபுருக்கு நடந்து சென்ற, 16 பேரை, போலீசார் மீட்டுள்ளனர். கேரளாவின் கோழிக்கோடில் இவர்கள் வேலை பார்த்து வந்தனர். முழு ஊரடங்கு அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன், உத்தர பிரதேசத்தின் ஜான்சிக்கு, ரயில் மூலம் வந்தனர். ரயில்கள் நிறுத்தப்பட்டதால், தண்டவாளம் வழியாகவே, 16 பேரும் நடந்து சென்றுள்ளனர். இதை அறிந்த போலீசார், அவர்களை மீட்டு, வாகனம் ஏற்பாடு செய்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டவர் வெளியேற்றம்

புதுடில்லி: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 1,000த்துக்கும் மேற்பட்டோர், சிறப்பு விமானங்கள் மூலம், சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜப்பானைச் சேர்ந்த, 150 பேர் அங்கிருந்து வந்த சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த, 500 பேரும், உக்ரைனைச் சேர்ந்த, 120 பேரும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, 240 பேரும், சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான சேவைக்கு முழு தடை உள்ள நிலையில், அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக, சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. அடுத்ததாக, இங்கு இருக்கும், 750க்கும் மேற்பட்ட ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களை அழைத்துச் சல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X