செய்திகள் சில வரிகளில்

Added : மார் 26, 2020
Share
Advertisement

மாத ரேஷன் பொருள்முன்கூட்டியே வழங்கல்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தும், நாடு முழுதும், 21 நாட்கள் முழு அடைப்பு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் மக்கள், வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அங்கு, 'ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்கப்படும்' என, மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று அறிவித்தார். இதன் மூலம், மாநிலத்தில், 90 சதவீத மக்கள் பயனடைவர் என, கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகை பார்த்து'பாலிவுட்' உதவி தொகை அறிவிப்பு

மும்பை: தமிழ் திரைப்பட துறையில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர், உதவித் தொகை அறிவித்துள்ளனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா, 50 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார். அவரை பின்பற்றி, தெலுங்கு நடிகர் ராம் சரணும், 70 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். இந்நிலையில், 'பாலிவுட்' திரைப்பட துறையில், உதவித் தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, உதவிகள் வழங்க உள்ளதாக, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, தப்ஸி பன்னுா உட்பட பலர், அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா பயத்தில்ஒருவர் தற்கொலை

மங்களூரு: கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றியவர் கோபாலகிருஷ்ண மடிவாலா, 56. இவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் அடைந்து உள்ளார்; தன் அச்சத்தை, குடும்பத்தினரிடம் பகிர்ந்துள்ளார். கடந்த செவ்வாய் நள்ளிரவு, 2:00 மணி வரை, இதுபற்றி குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அதன் பின், தன் வீட்டருகே உள்ள மரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக, தற்கொலை செய்து கொண்டதாக, கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மீட்புப் பணியில்'ஸ்பைஸ் ஜெட்'

புதுடில்லி: மேற்காசிய நாடான ஈரானில் இருந்து, டில்லி அழைத்து வரப்பட்ட, 142 இந்தியர்களை, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில், ராணுவம் உருவாக்கி உள்ள மருத்துவ முகாமில் தனிமைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையத்து, 142 பேரும், டில்லியில் இருந்து ஜோத்பூருக்கு, 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் மூலம், நாளை மறுநாள் அழைத்து வரப்பட உள்ளனர். இதற்காக, அந்நிறுவனத்தின், 'போயிங் - 737' விமானம், தயார் நிலையில் உள்ளது.ஆந்திராவில், 'ஆல் பாஸ்!'திருப்பதி: ஆந்திராவில், கொரோனா தொற்று பாதிப்பு அச்சுறுத்தலால், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆந்திர கல்வித்துறை அமைச்சர் சுரேஷ், நேற்று மதியம் வெளியிட்டார்.
டி.எஸ்.பி., சஸ்பெண்ட்:
ஆந்திர மாநிலம், ஏலுாரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றனர். அவர்களை, போலீசார் தடுத்தி நிறுத்தினர். அடை யாள அட்டைகளை செய்தியாளர்கள் காண்பித்த போதும், அவர்களை போலீசார் தாக்கினர். இதனால், செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த செய்தித்துறை அமைச்சர் பேர்ணி நானி, ஏலுார் டி.எஸ்.பி.,யை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். பின் செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.
ஊர் எல்லையில் முள் தடை
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே, காளஹஸ்தியை அடுத்த, வெங்கடாபுரம் கிராமத்தினர், தங்கள் ஊருக்குள் மற்றவர்கள் வருவதை தடுக்க, கிராம எல்லையில், முள்மரங்களை வெட்டி சாலையில் போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். தங்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வேறு நகரங்களில் இருந்தாலும், அவர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், கிரமத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். எல்லையிலிருந்து கிராமம் முழுதும் கிருமிநாசினி மருந்துகளை தெளித்துள்ளனர். கிராம எல்லையில், ஓரிருவர் நின்று, உள்ளே வர முயலுவோருக்கு, கொரோனா பாதிப்பு குறித்து எடுத்துரைத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்; செய்தியாளர்களையும் திருப்பி அனுப்பினர். கிராம மக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவது, சுகாதாரத்துறையினரிடம் பாராட்டை பெற்று தந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X