பொது செய்தி

இந்தியா

உஷார் நிலை போதாது மக்களே!

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020
Share
Advertisement
 உஷார் நிலை போதாது மக்களே!

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். 'கொரோனா' என்ற வைரசின் வீரியம் மக்களுக்குப் புரியவில்லை என்றே தோன்றுகிறது. நாட்டை பீடித்துள்ள நோயை விரட்டவே, பிரதமர் மோடி, ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.தும்மல், இருமல் வழியே பரவுகிறது என்று நாம் நினைத்தாலும், உலக சுகாதார நிறுவனம், 'ஊரடங்கு மட்டுமே போதாது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிகிச்சை பணிகளையும், நோய் பாதிக்கப்பட்டுள்ளோர் தங்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுகாதாரப் பணிகளையும் மேற்கொண்டால் மட்டுமே, நோய் பரவாமல் தடுக்க முடியும்' எனக் கூறி இருக்கிறது.இந்த வார்த்தைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
நோய் பாதிக்கப்பட்டவருக்கு தீவிரமான சிகிச்சை, அவர் தங்கி இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளில், கிருமி பரவாமல் இருக்கும் வகையிலான சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பான முறையில் மேற்கொண்டாக வேண்டும். அதற்கு, மக்களாகிய நாம் மிகுந்த கவனத்துடன், ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.நம் வாசகர் ஒருவர், இதற்கென ஆத்திசூடி தயாரித்து வழங்கியுள்ளார். படியுங்கள்.


கொரோனா ஆத்திசூடி



அடிக்கடி கை கழுவு
ஆபத்தை அறிந்துகொள்
இல்லத்தில் தனித்திரு

ஈரடி தள்ளி நில்
உற்றாரை ஒதுக்கி வை
ஊரடங்கை மதித்து நட
எங்கேயும் சுற்றாதே
ஏக்கத்தை அடக்கி வை
ஐயமின்றி அனைத்தும் உண்
ஒதுங்கியிருக்கக் கற்றுக்கொள்
ஓரிடத்தில் ஓய்ந்திரு
ஔஷதமில்லை கொரோனாவிற்கு
இ ஃ து அறிதலே
இனிய வாழ்வு!
ஜோ.ஜெயகுமார்,
நாட்டரசன்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X