பொது செய்தி

இந்தியா

கொரோனா துளிகள்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

பெங்களூரில் துப்பாக்கிச் சூடு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஊரடங்கு உத்தரவை மீறிய இரு இளைஞர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த இளைஞர்கள், போலீசாரை கடுமையாக தாக்கி, தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து, அருகில் நின்ற இன்ஸ்பெக்டர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பின், அந்த இளைஞர்களின் காலை நோக்கியும் சுட்டார். இதனால், பீதியடைந்த இருவரும், தப்பி ஓடும் முயற்சியை கைவிட்டு சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞர்களுக்கு உதவியதாக, மேலும் நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணத்தை ஒத்தி வைத்த அதிகாரிகள்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சிக்மாவில், உதவி கலெக்டராக பணியாற்றுபவர் ஷீத்தல். இவருக்கும், அதே மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றும் ஆயுஷ் என்பவருக்கும், நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து, இவர்கள், தங்கள் திருமண தேதியை ஒத்தி வைத்துள்ளனர். அவர்களுக்கு, சக அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கை மீறுவதா?சகோதரர் அடித்துக் கொலை
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் தாக்கூர். இவரது இளைய சகோதரர் துர்கேஷ். கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துர்கேஷ், அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தார். அவரை, ராஜேஷ் கடுமையாக எச்சரித்தார். இதையடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த துர்கேஷ், பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மருத்துவமனையில், 'ரோபோ'
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, உணவு கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள, 'ரோபோ' ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில்,'இது, சோதனை முயற்சி தான். ரோபோவின் செயல்பாடுகள் திருப்தி அளித்தால், மற்ற மருத்துவமனைகளிலும், இதுபோன்ற ரோபோக்கள் பணியமர்த்தப்படும்' என்றார்.
சாலையோர உணவகங்களுக்கு அனுமதி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள் மற்றும் வாகன பழுது பார்ப்பு மையங்கள் தொடர்ந்து செயல்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தடையின்றி இயங்குவதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X