சீனாவில் புதிதாக , 67 பேருக்கு நோய் தொற்று

Added : மார் 26, 2020
Share
Advertisement
 சீனாவில் புதிதாக , 67 பேருக்கு நோய் தொற்று

பீஜிங் : சீனாவில், இரு நாட்களாக, கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படாத நிலையில், வெளிநாடு சென்று வந்தோரில், புதிதாக, 67 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா உருவான ஹூபய் மாகாணம் மற்றும் தலைநகர் வூஹானில், புதிதாக யாரும் பாதிக்காதபோதிலும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தாண்டு ஜனவரி முதல், கடந்த, 24ம் தேதி வரை, நோய் தொற்றுக்கு ஆளான, 81 ஆயிரத்து, 285 பேரில், 3,287 பேர் இறந்துள்ளனர். அதில், ஹூபய் மற்றும் வூஹானில் இறந்த, 3,169 பேரும் அடங்குவர். 74 ஆயிரத்து, 51பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,947 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சீனா, வூஹான் நகரை, அதிக இடர்ப்பாடு பிரிவில் இருந்து, நடுத்தரப் பிரிவிற்கு மாற்றியுள்ளது. இதையடுத்து, ஒன்பது வாரங்களுக்குப் பின், அந்நகரில் முதன் முதலாக பஸ் போக்குவரத்து துவங்கியது.

இந்நகரில், ஊரடங்கு உத்தரவு, ஏப்., 8ல் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, உள்நாட்டில் மட்டும், விமான போக்குவரத்து துவங்க உள்ளது. வூஹான் நகரில், பள்ளிகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றுக்கு, இம்மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.'இதை, ஏப்ரல் வரை நீடித்தால், கொரோனா வைரசின் இரண்டாவது படையெடுப்பை, அக்டோபர் வரை தாமதப்படுத்தலாம்; இல்லையெனில், ஆகஸ்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது' என, 'லான்செட் பப்ளிக் ஹெல்த்' இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X