செய்தி துளிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

புதிய கருவி கண்டுபிடிப்பு
லண்டன்: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசை கண்டுபிடிக்கும், 'ஸ்மார்ட் போன்' அளவிலான கருவியை உருவாக்கிஉள்ளனர். இதில், தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை வைத்தால், 50 நிமிடங்களில், கொரோனா குறித்த முடிவுகளை வழங்கும் என, கூறுகின்றனர். இந்த கருவியில், ஒரே நேரத்தில், 13 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம்.
மாணவர்களுக்கு இலவச உணவு
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக, ௨௨ம் தேதி முதல், அமெரிக்காவில் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள், விடுதிகளை காலி செய்ய வேண்டிய நிலை உருவானது. அவர்கள் நாடு திரும்ப, விமானங்களும் இயக்கப்படவில்லை. இந்திய துாதரகம் கூறியதை ஏற்று, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி ஓட்டல் உரிமையாளர்கள், மாணவர்களுக்கு, 700 ஓட்டல்களில், 9,௦௦௦க்கும் மேற்பட்ட அறைகளை இலவசமாக வழங்கியுள்ளனர்; அவர்களுக்கு, உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்திய வம்சாவளி, 'செப்' பலி
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர், பிலாய்ட் கார்டோஸ், 56, மனைவி, மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த, ௧௮ம் தேதி, உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டது. நியூஜெர்சி, மவுண்டன்சைட் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். பிலிப்பைன்சில் 9 டாக்டர்கள் பலி மணிலா: கொரோனா தாக்குதலில், பிலிப்பைன்சில், ௩௮ பேர் பலியாகி உள்ளனர்; இவர்களில், ஒன்பது பேர் டாக்டர்கள் என, பிலிப்பைன்ஸ் மருத்துவ சங்கம், நேற்று தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X