உலக செய்திகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

வாகனங்கள் மோதல்: 15 பேர் பலி

கெய்ரோ: ஆப்ரிக்க நாடான எகிப்தில், கொரோனா பாதிப்பு பரவலை தடுக்க, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, சொந்த ஊருக்கு செல்ல முயன்றபோது, வேகமாக வந்த ஒரு டிரக், பல கார்கள் மீது மோதியது. இந்த தொடர் விபத்துகளில், 15 பேர் உயிரிழந்தனர்.
ஏவுகணை தாக்கல்
பாக்தாத்: மேற்காசிய நாடான ஈராக்கின் தலைநகர் பாக்தாதில், அரசு அலுவலகங்கள், வெளிநாட்டு துாதரகங்கள் அமைந்துள்ள பகுதியை குறிவைத்து, இரண்டு ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. ஆனால், இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அமெரிக்க துாதரகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என, கருதப்படுகிறது.
மன்னிப்பு கேட்கும் பயங்கரவாதி
வெலிங்டன்: நியூசிலாந்தின் சர்ச்கிரைஸ்டில் உள்ள, இரண்டு மசூதிகளில், கடந்தாண்டு, ஒரு பயங்கரவாதி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதை, தன் முகநுால் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பினார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, நியூசிலாந்தைச் சேர்ந்த பிரென்டன் ஹாரிசன் டாரன்ட், 29, மீது, 51 பேர் கொலை, 40 பேர் மீது கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 'நான் குற்றமற்றவன்' என கூறி, நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.காணாமல் போன உளவு அதிகாரி மரணம்வாஷிங்டன்: அமெரிக்காவின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ.,யின் முன்னாள் உளவு அதிகாரியான பாப் லெவின்சன், கடந்த, 2007ல், மாயமானார். அவர், ஈரான் அரசால் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த மாதம், 72 வயதை நிறைவு செய்த அவர் குறித்து, 13 ஆண்டுகளாகியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 'அமெரிக்க அரசு மற்றும் எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, லெவின்சன் இறந்திருக்கலாம். அதனால், அவர் இறந்தவராக கருதப்படுகிறார்' என, அவருடைய குடும்பத்தார் கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் மாயம்
பமாகோ: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலேயின் முக்கிய எதிர்க்கட்சியான, குடியரசு மற்றும் ஜனநாயகத்துக்கான சங்கத்தின் தலைவர், சவுமாய்லா சிசே, திடீரென மாயமானார். இதை, அவருடைய கட்சி உறுதி செய்துள்ளது. முன்னாள் நிதி அமைச்சரான அவர், அதிபர் பதவிக்கு மூன்று முறை போட்டியிட்டார். சமீபத்தில், மத்திய மாலேயின் நியாபுங்கே நகருக்கு சென்ற அவர், மாயமானார்.
இந்திய துாதர் ஆறுதல்காபூல்: தெற்காசிய நாடான, ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள குருத்வாராவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், 25 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானுக்கான இந்திய துாதர், வினய் குமார், குருத்வாராவுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X