ஐரோப்பிய நாடுகளில் வேகமெடுக்கும், 'கொரோனா'

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஐரோப்பிய நாடுகளில் வேகமெடுக்கும், 'கொரோனா'

பாரிஸ் : உலக அளவில், 185 நாடுகளில் வைரஸ் பாதிப்பு பரவி உள்ள நிலையில், 44 ஐரோப்பிய நாடுகளில் மட்டும், உலகின் மொத்த பாதிப்பு மற்றும் உயிர் பலியில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.நேற்று முன்தினம் நிலவரப்படி, உலகெங்கும், 4 லட்சத்து, 88 ஆயிரத்து, 426 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்து, 17 ஆயிரத்து, 604 பேர், சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், 22 ஆயிரத்து, 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 44 ஐரோப்பிய நாடுகளில் மட்டும், 2 லட்சத்து, 58 ஆயிரத்து, 68 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. அங்கு, 14 ஆயிரத்து, 640 பேர் உயிரிழந்தனர். அதிலும், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இத்தாலியில், 74 ஆயிரத்து, 386 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது; 7,503 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிக பலி இங்கு தான் பதிவாகி உள்ளது. ஸ்பெயினில், 56 ஆயிரத்து, 188 பேருக்கு தொற்று உள்ளது; 4,089 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜெர்மனியில், 39 ஆயிரத்து, 502 பேருக்கு தொற்று உள்ளது; 222 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில், 25 ஆயிரத்து, 233 பேருக்கு தொற்று உள்ளது; 1,331 பேர் உயிரிழந்துள்ளனர்.சர்வதேச அளவில், பதிவான வைரஸ் தொற்றுள்ளோர் மற்றும் உயிர் பலியில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக, ஐரோப்பிய நாடுகளில் பதிவாகிஉள்ளது.இதற்கிடையே, மேற்காசிய நாடான, ஈரானில், மேலும், 157 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 2,234 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 29 ஆயிரத்து, 406 ஆக உயர்ந்துள்ளது.ஐரோப்பிய நாடான கிரீசில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள வடகிழக்கு பகுதியில், வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.சார்லஸ் அத்துமீறலா?பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு, வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் அவர் தனிமையில் இருக்கிறார். அதே நேரத்தில், அவருடைய மனைவி, கமீலாவுக்கு தொற்று இல்லை.சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர், பரிசோதனைக்காக காத்திருக்கும் நிலையில், வரிசையில் காத்திராமல், சார்லஸுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை, பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர், எட்வர்ட் ஆர்கர் மறுத்தார். 'இளவரசர் சார்லஸ், வரிசையை மீறவில்லை. அவருக்கு இருந்த அறிகுறிகள், உடல் நிலையைக் கருதி பரிசோதனை செய்யப்பட்டது' என, ஆர்கர் தெரிவித்துஉள்ளார்.

இதற்கிடையே, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனைகளில், அதிக அளவில், கொரோனா வைரஸ் பாதிப்புள்ளோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 'மருத்துவமனைகளில் அதிகமானோர் குவிந்து வருகின்றனர். நிலைமை மோசமாக உள்ளது; சுனாமி போல் உள்ளது' என, தேசிய மருத்துவ சேவை உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
29-மார்-202007:19:09 IST Report Abuse
Raja இனிமேல் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து பிறநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை உயரும். கொத்துகொத்தாக மனிதர்கள் மரணிக்கும் நிலை இந்தியாவில் வரக்கூடாது என்று மோடி கடுமையாக உழைக்கிறார். இதை புரிந்துகொள்ளாமல் குறைகூறிக்கொண்டு சில தறுதலைகள் சட்டத்தை மீறி தெருக்களில் சுற்றுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X