பொது செய்தி

இந்தியா

செய்திகள் சில வரிகளில்...

Added : மார் 26, 2020
Share
Advertisement

மாற்றுத் திறனாளிக்கு போலீஸ் உதவி
மும்பை: மும்பையில், தனித்து வசிக்கும், விராலி மோடி என்ற மாற்றுத் திறனாளி பெண், ஊரடங்கு உத்தரவு காரணமாக, சமையல் செய்ய உதவியாளர் வராமல், பட்டினி கிடப்பதாக, 'டுவிட்டரில்' பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மஹா., உள்துறை அமைச்சர், அனில் தேஷ்முக் உத்தரவின்படி, போலீசார், விராலி மோடி வீட்டுக்குச் சென்று, உதவியாளரும், அவரை வாகனத்தில் அழைத்து வரும் ஓட்டுனரும், தடையின்றி வர, 'பாஸ்' வழங்கினர்.

குணமான தம்பதிக்கு மும்பையில் வரவேற்பு

மும்பை: வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு, கொரோனா உடன் திரும்பிய, முதிய தம்பதி, தீவிர சிகிச்சைக்குப் பின், குணமடைந்தனர். இதையடுத்து, வீடு திரும்பிய தம்பதியை, குறிப்பிட்ட இடைவெளியில் நின்று, உற்றார், சுற்றத்தார் வரவேற்றனர். மேலும், தம்பதி, 14 நாட்கள் வீட்டில் தனித்திருக்க வேண்டும் என்பதால், உணவுப் பொருட்களையும் வழங்கினார். அப்போது ' சுற்றத்தாரால் ஒதுக்கப்படுவோம் என, எண்ணியதற்கு மாறாக, அன்பை பொழிந்த உள்ளங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை' என தம்பதி நெகிழ்ச்சியுடன் கூறினர். இதேபோல, வெளிநாட்டில் இருந்து கொரோனாவுடன் மும்பை வந்து, குணமடைந்து வீடு திரும்பிய, சகோதர - சகோதரி இருவர், சுற்றத்தாரின் அன்பு, தங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டதாக, நன்றி தெரிவித்தனர்.
போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

புதுடில்லி: நாடு முழுதும் ஊரடங்கு உள்ள போதிலும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை. ஆனால், டில்லியைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர், அராஜகமாக, மூன்று காய்கறி வண்டிகளை கீழே தள்ளி விட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, அத்துமீறி நடந்த போலீஸ்காரர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோல்கட்டாவில்31 ஓட்டலில் தனியிடம்
கோல்கட்டா: மேற்கு வங்க அரசின் கோரிக்கையை ஏற்று, கோல்கட்டாவில், ரஜர்ஹத், நியூ டவுன் பகுதிகளைச் சேர்ந்த, 31 ஓட்டல்கள், கொரோனாவால் தனிமையில், 14 நாட்கள் இருக்க வேண்டியோருக்கு, கட்டணத்தில் அறைகளை ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளன. 'அனைத்து அறைகளும், கழிப்பறை வசதியுடன், சுகாதாரத் துறையின் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும்' என, ஓட்டல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஓட்டல்களின் சுகாதார நடவடிக்கை களை கண்காணிக்கவும், தனி அதிகாரிகளை, கோல்கட்டா மாநகராட்சி நியமித்துள்ளது.

7 லட்சம் பரிசோதனை பொருட்கள் தேவை

புதுடில்லி: இந்தியாவில், 600க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி, 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறியும் மருத்துவ பரிசோதனை பொருட்கள் அடங்கிய, 'கிட்' களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, 'ஏழு லட்சம் கிட்கள் தேவை' என, இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அறிவித்துள்ளது. இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், தொகுப்பின் விலை, ஒரு தொகுப்பில் எத்தனை முறை பரிசோதனை செய்யலாம், சப்ளை விபரம் உள்ளிட்ட தகவல்களுடன் உடனேவிண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X