பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் கிடைக்குமா?

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை : கடும் சிரமத்திற்கு இடையிலும், மக்களுக்கு, உணவு பொருட்களை வழங்கும் தங்களுக்கும், சிறப்பு ஊதியமாக, ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என, ரேஷன் ஊழியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க பொதுச் செயலர், தினேஷ் குமார் கூறியதாவது:ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற, அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி, பொங்கலுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பை, எந்த பிரச்னையும் இல்லாமல், ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களுக்கு வழங்கினர்.

இதுவரை, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, பல பெண் ஊழியர்களை, அவரது குடும்பத்தினர் வேலைக்கு செல்ல அனுமதிப்பதில்லை. இருப்பினும், அனைத்து ஊழியர்களும், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுக்கு பொருட்களை வழங்குகின்றனர்.அரசு தற்போது, ரேஷன் கடைகள் வாயிலாக, 1,000 ரூபாய் நிவாரணமும், அரிசி உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.எனவே, மருத்துவ பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு, ஒரு மாத சம்பளம், சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என, அறிவித்ததை போல, ரேஷன் ஊழியர்களுக்கும், முதல்வர், இ.பி.எஸ்., சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.பஸ் இல்லாததால், ஊழியர்கள் ரேஷன் கடைகளுக்கு வர சிரமப்படுகின்றனர். இதனால், கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே, வாகன வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X