ஊழியர்களுக்கு பாதுகாப்பு மின் வாரியம் அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர்களுக்கு பாதுகாப்பு மின் வாரியம் அறிவுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
சென்னை : ஊழியர்கள், சுமூகமாக பணிக்கு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீசாருடன் இணைந்து செய்யுமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில், தற்போது, கோடை காலம் என்பதால், வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், எப்போதும் வெப்பத்துடன் உள்ள, மின் வினியோக பெட்டிகள், டிரான்ஸ்பார்மர்கள் போன்ற சாதனங்கள் பழுதாகி, மின் தடை ஏற்பட

சென்னை : ஊழியர்கள், சுமூகமாக பணிக்கு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீசாருடன் இணைந்து செய்யுமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில், தற்போது, கோடை காலம் என்பதால், வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், எப்போதும் வெப்பத்துடன் உள்ள, மின் வினியோக பெட்டிகள், டிரான்ஸ்பார்மர்கள் போன்ற சாதனங்கள் பழுதாகி, மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, தடையில்லாமல், மின் வினியோகம் செய்வதற்கான பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், ஏப்., 14ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஐந்து நபருக்கு மேல் ஒன்று கூடினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போலீசார் எச்சரித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக, மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய, மின் ஊழியர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள், பணிக்கு வரும்போதும், போகும் போதும், காவல் துறையினரின் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மின் வாரியத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும், உயரதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஊழியர்கள் சுமூகமாக பணிக்கு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாருடன் இணைந்து செய்யுமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், துணை மின் நிலையங்களின் இயக்கம், மின் சாதன பழுதுகளை சரிசெய்தல் போன்ற, முக்கிய பணிகளில் மட்டும் ஊழியர்களை ஈடுபடுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X