பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை ரத்து செய்ய கோரிக்கை

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்களை ரத்து செய்யும்படி, தமிழக அரசுக்கு, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டம்தமிழகத்தில், பெண்களின் முன்னேற்றம் மற்றும் தனி நபர் வருமான பெருக்கத்திற்காக, மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அனைத்து கிராமங்களிலும், சுய உதவி குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், 12 முதல், 20 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.அதில், ஒருவர் தலைவராக செயல்படுவார்.

மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள், கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் துறை வங்கிகளில், சேமிப்பு கணக்குகளை துவக்கி, கடன் பெறுகின்றனர்.அந்த கடன் தொகையில், டிபன் கடை, புடவை வியாபாரம், மீன் வியாபாரம், தையல் போன்ற சிறு தொழில்களை செய்கின்றனர். மாதந்தோறும், குழுவின் தலைவர் வீட்டில், சுய உதவி குழுக்களின் கூட்டம் நடக்கும்.முடக்கம்அப்போது, அனைத்து உறுப்பினர்களிடம் இருந்து, கடன் அசல் தொகை மற்றும் வட்டிக்கான, மாத தவணை வசூலிக்கப்படும். அவற்றை மொத்தமாக சேர்த்து, குழுவின் தலைவர், வங்கியில் செலுத்துவார்.

தற்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஏப்., 14 வரை, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில், சிறு வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள பலரும், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.குறிப்பாக, பெண்கள் நடத்திய தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, வங்கிகள் வழங்கிய கடன்களை ரத்து செய்யுமாறு, அவற்றில் உள்ள பெண்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
27-மார்-202009:02:35 IST Report Abuse
Ramachandran Rajagopal பெரும்பாலான சுய உதவிக்கு குழுக்கள் எந்த தொழிலும் செய்யாமல் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுவரும் நிலையில் அந்த கடனைக் காட்டாமல் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என கோரிக்கை வேறு விடுக்கின்றனர்.இப்படிப் பட்டவர்களுக்கு மத்திய அரசு இருபது லட்சமாக உச்ச வரம்பை உயர்த்தியுள்ளது. எங்கிருந்து இந்நாடு முன்னேறிய நாடாக ஆவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X