பொது செய்தி

தமிழ்நாடு

மொத்த வணிகத்திற்கு அனுமதி: வியாபாரிகள் வலியுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை :தென் மாவட்டங்களுக்கு, மளிகை பொருட்களை வினியோகிக்க, குறைந்த ஊழியர்களுடன், மொத்த வணிகம் செயல்பட அனுமதிக்கும்படி, தமிழக அரசை, வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர், எஸ்.பி.ஜெயபிரகாசம், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:மதுரையில் உள்ள மொத்த வணிகர்களிடம் இருந்து தான், அரிசி, பருப்பு, மாவு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், மஞ்சள், மிளகு, எண்ணெய் போன்ற பொருட்கள், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள, சிறு வணிகர்களுக்கு செல்கின்றன.இந்த பொருட்கள், மதுரையில் இருந்து செல்லவில்லை என்றால், மற்ற மாவட்டங்களில் பற்றாக்குறை ஏற்பட்டு விடும். மதுரையில், கொரோனா வைரஸ் பாதிப்பால், ஒருவர் உயிரிழந்த காரணத்தால், மொத்த வணிகத்தை நடத்த, மதுரை கலெக்டரும், போலீசாரும் அனுமதிப்பதில்லை
.அதே சமயம், பெரிய நிறுவனங்களின் பல்பொருள் அங்காடிகள் மட்டும் திறந்திருக்கின்றன. பொது மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதிக மக்கள் கூடாதவாறு, ஒருவருக்கு ஒருவர் இடம் விட்டு நிற்கவும், குறைந்த ஊழியர்களுடன், மொத்த வணிக கடைகள் செயல்படவும் அனுமதி அளிக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X