பொது செய்தி

தமிழ்நாடு

கடன் வசூலை நிறுத்த வேண்டும் : சிறு, குறு நிறுவனங்கள் கோரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை :'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள நிலையில், கடனுக்கான தவணை வசூலை நிறுத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்' என, சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்னல்கள்தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்,இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு பிரச்னைகளை, சந்தித்து வருகின்றன. தற்போது, கொரோனா வைரஸ் பரவலால், நிதி, பணம் செலுத்துதல், திறமையான தொழிலாளர்கள் இல்லாமை, மூலப் பொருட்கள் கிடைக்காமை என, பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.
அபராதம்எனவே, செலுத்த வேண்டிய, இ.எஸ்.ஐ., தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஜி.எஸ்.டி., போன்றவைகளை, ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். வட்டி மற்றும் அபராதம் இல்லாமல் செலுத்த, 12 மாதம் தவணை வழங்க வேண்டும்.முன்கூட்டியே செலுத்தும், வருமான வரி மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் போன்றவற்றை, ஆறு மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

கடனுக்கான தவணை வசூலிப்பதை நிறுத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.வாராக் கடன் மேலும், 2021 மார்ச் வரை, வாராக் கடன் பட்டியலில் சிறு, குறு நிறுவனங்களை வைக்கக்கூடாது. ஆண்டு வருவாய் குறைந்தாலும், ஏற்கனவே வழங்கிய வசதிகளை வங்கிகள் குறைக்கக் கூடாது என்பது உட்பட, 15 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X