பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு பொதுப்பணி துறையினர் தீவிரம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை :அரசு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான பணிகளை, பொதுப்பணி துறையினர் செய்து வருகின்றனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதையடுத்து, தாம்பரம்சானடோரியம்; மதுரை மாவட்டம், தோப்பூர்; ஈரோடு மாவட்டம், பெருந் துறை; தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி; கோவை ஆகிய அரசு மருத்துவ மனைகளில், கொரோனா சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, நோயாளிகளுக்கான படுக்கைகள், வழக்கமான இடைவெளியை விட, கூடுதல் இடைவெளியில் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும், குறைந்தபட்சம், 100 முதல், அதிகபட்சமாக, 300 படுக்கைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும், தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக செயல்பட உள்ளன. தனித்தனி கழிவறைகள், ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கன்னியாகுமரி உள்பட, மேலும், 10 மாவட்ட மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவை துவக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தயார் நிலையில் இருக்கும்படி, பொதுப்பணி துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு உத்தரவை அடுத்து, இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை செயலர், மணிவாசன், கட்டடங்கள் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளர், ராஜாமோகன் ஆகியோர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X