பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு பேருக்கு மேல் சேர தடை : கடைகள் முன் மக்கள் நிற்க வட்டம்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 எட்டு பேருக்கு மேல் சேர தடை : கடைகள் முன் மக்கள் நிற்க வட்டம்

சென்னை : உள்ளாட்சி அமைப்புகளின், துாய்மை பணியாளர்கள் வாயிலாக, சமூக விலகல் நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்காக, பொது மக்களை வீட்டிலேயே இருக்க, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதற்காக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே, திறக்கப்பட்டுள்ளன.

இவற்றை வாங்க, பொது மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள், சமூக விலகலை கடைப்பிடிக்க, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 'பொருட்களை வாங்க வருபவர்கள், கடைகளில், ஒருவருக்கு பின் ஒருவர், மூன்றடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்; எட்டு பேருக்கு மேல் சேருவதை தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி வருகின்றனர்.அதன்படி, கடைகளுக்கு முன், போதுமான இடைவெளி விட்டு, வட்டம் போடப்பட்டு, அங்கு பொது மக்கள் நிறுத்தப்பட்டு, பொருள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன்,மாநிலம் முழுதும், பால், காய்கறிகள், மளிகை கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகளில், இந்த நடைமுறை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X