பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இருந்து வேலை சாத்தியமா? : வீட்டுவசதி அதிகாரிகள் ஆலோசனை

Updated : மார் 27, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
வீட்டில், இருந்து, வேலை, சாத்தியமா? ,வீட்டுவசதி,அதிகாரிகள் ஆலோசனை

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் பணிகளை, வீட்டில் இருந்தபடியே மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆராய்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக, நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்லாது, பல்வேறு தனியார் நிறுவனங்களும், வீட்டில் இருந்தபடியே, அலுவலக வேலைகளை மேற்கொள்ள, பணியாளர்களை அறிவுறுத்தி உள்ளன.

'அரசு துறைகளில் இது சாத்தியமா' என்று, ஆராய வேண்டிய தேவை எழுந்துள்ளது. கட்டுமான திட்ட அனுமதி வழங்கும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., ஆகியவற்றில், பெரும்பாலான பணிகள் கணினி மயம் ஆக்கப்பட்டுள்ளன.அதிலும், தற்போது ஆன்லைன் வாயிலாக, பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளன.

இதன்படி, அதிகாரிகளும் எங்கிருந்தும், இந்த கோப்புகளை ஆய்வு செய்ய வசதி உள்ளது. இதை பயன்படுத்துவதற்கான தேவை, இதுவரை எழவில்லை. தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வீட்டில் இருந்து பணி புரிவதை, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அதிகாரிகளும் பின்பற்றலாமே என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: கட்டுமான திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவு, பரிசீலனை, கூடுதல் விபரங்கள் கோருதல், முடிவுகள் எடுத்தல் என, அனைத்து பணிகளும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கான சாப்ட்வேர், இணையதள அடிப்படையில், செயல்படும் நிலையில் உள்ளது.மேலும், ஆன்லைன் விண்ணப்ப பரிசீலனையில் தொடர்புள்ள, அனைத்து அதிகாரிகளுக்கும், டிஜிட்டல் கையெழுத்து வசதியும் உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கான பாஸ்வேர்டு பயன்படுத்தி, எங்கிருந்தும் கோப்புகளை ஆய்வு செய்யலாம். அதில், தங்கள் குறிப்புகளை பதிவு செய்யலாம்.எனவே, தற்போது எழுந்துள்ள நெருக்கடியான சூழலில், அதிகாரிகள் வீட்டில் இருந்தபடியே பணி புரிவதை, மேலதிகாரிகள் அனுமதித்தால், நிலுவை கோப்புகளை முடித்து விடலாம். இந்த நடைமுறை, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இது குறித்து, டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சோதனை முயற்சியாக, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அதிகாரிகளை வீட்டில் இருந்தபடி, பணி புரிவதை அனுமதிப்பது குறித்து, வீட்டு வசதித்துறை ஆலோசித்து வருகிறது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-மார்-202018:57:54 IST Report Abuse
ஆரூர் ரங் ரூம் போட்டு யோசிச்சு கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
raj82 - chennai,இந்தியா
27-மார்-202014:26:25 IST Report Abuse
raj82 கூகுளை பெ மாதிரி லஞ்சம் பெ ஆப் பண்ணனும் வித் அவுட் trace
Rate this:
Share this comment
Cancel
Arumugam Arulkumar - Kangayam,இந்தியா
27-மார்-202012:27:36 IST Report Abuse
Arumugam Arulkumar லஞ்சம் வாங்கும்போது கிருமிநாசினி உபயோகித்து வாங்கலாம், dtcp and cmda officers ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X