பொது செய்தி

தமிழ்நாடு

காலை 3:30 முதல் 9:00 மணி வரை தான் பால் விற்பனை முகவர்கள் சங்கம் அறிவிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை :போலீஸ் கெடுபிடிகளால், இன்று முதல், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும், பால் விற்பனை செய்யப் போவதாக, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்க தலைவர், பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா' பரவு வதை ஒழிக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், தடையின்றி கிடைத்திடும் என, அரசு அறிவித்துள்ளது.போலீசாரின் அடக்குமுறையால், பால் முகவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யும் பாலை, சில்லரை வணிகர்களுக்கு வினியோகம் செய்ய முடியாமல், சிரமப்படுகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும், பால் முகவர்கள் அனைவரும், சில்லரை விற்பனை கடைகளுக்கு, பால் வினியோகம் செய்வதில்லை என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பால் முகவர்களின் கடைகளில், அதிகாலை, 3:30 மணி முதல், காலை, 9:00 மணி வரை மட்டும், பால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்படும். பால் தட்டுப்பாடு எனக்கூறி, சில சமூக விரோதிகள், லிட்டர் பாலை, 100 ரூபாய்க்கு மேல் விற்பதாக, தகவல்கள் வருகின்றன. அதிக விலைக்கு விற்பவர்கள் பற்றி தெரிவித்தால், அவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஆவின் பால் கிடைக்கும்!
சென்னை,:மக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க, வினியோக பணிகளை, தமிழக அரசின், ஆவின் நிர்வாகம் முடுக்கி விட்டு உள்ளது.அதன்படி, அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களிலும், மக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள், அதிகாலை, 3:30 மணி முதல் இரவு, 10:30 மணி வரை கிடைத்திடும் வகையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.தற்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும், பால் விற்பனை செய்ய போவதாக, பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதல் பால் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும், ஆவின் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X