பொது செய்தி

தமிழ்நாடு

உலக சுகாதார மைய வழிகாட்டுதல்கள் : தமிழக மருத்துவமனைகளில் கேள்விக்குறி

Updated : மார் 27, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
உலக,சுகாதார மைய,வழிகாட்டுதல்கள்,தமிழக, மருத்துவமனைகளில், கேள்விக்குறி

சென்னை : 'கொரோனா' நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு, உலக சுகாதார மைய வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது:
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளை கண்காணிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும், அரசு மருத்துவமனைகளில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துறை வாரியாக, டாக்டர்களும், செவிலியர்களும் பிரிக்கப்பட்டு, தனிமை வார்டில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


அடிப்படை வசதி

நாள் ஒன்றுக்கு, 12 மணி நேரம் என, ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால், அதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எச்.ஐ.வி., பாதிப்புக்கான சிகிச்சையின் போது, பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள், தனிமை வார்டில் பணிபுரியும் டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், உலக சுகாதார மைய விதிப்படி, மூன்றடுக்கு உள்ள, பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒரே ஒரு பாதுகாப்பு உடை மட்டுமே தரப்படுகிறது.மேலும், ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, 14 நாட்கள் தனிமையில் இருக்க, அவகாசம் வழங்காமல், ஒரு வாரம் மட்டுமே ஓய்வெடுக்க அனுமதி வழங்குகின்றனர். அவர்களையும், அவசரம் எனில், மீண்டும் பணிக்கு வர தயாராக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, உலக சுகாதாரம் மையம் பரிந்துரைத்த, முக கவசமும் வழங்கப்படவில்லை. அந்த வகை முக கவசம் இருப்பு இல்லை என, கூறப்படுகிறது.


அரசு ஏற்பாடு

அனைத்து ஓட்டல்களும், டீ கடைகளும் மூடப்பட்டுள்ளதால், நோயாளிகளுடன் இருக்கும், கவனிப்பாளர்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர்.சென்னை போன்ற பெரிய நகரங்களில், மருத்துவமனைகளிலும், அதன் அருகிலும், அம்மா உணவகம் உள்ளது. ஆனால், வெளியூர்களில் உள்ள மருத்துவமனை வளாகத்திலோ, அருகிலோ, அம்மா உணவகம் இல்லை. அதனால், நோயாளி உடன் இருப்பவர்களுக்கு, உணவு கிடைக்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற உபாதைகளுடன் வரும் நோயாளிகளையும், அவர்களை அழைத்து வருவோரையும், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு உட்படுத்தினால், நோய் பரவலை தடுக்க முடியும்.டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட, மருத்துவ பணிக்கு வரும் அனைவருக்கும், போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும். மாநகர பஸ்கள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டது; ஆனால், அவை இயங்கவில்லை.


நடவடிக்கைஅரசும், சுகாதாரத் துறை அமைச்சரும் வெளியிட்ட அறிவிப்புகள், அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன; நடைமுறைக்கு வரவில்லை. அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
27-மார்-202019:42:53 IST Report Abuse
R.Kumaresan ஊரடங்கு உத்தரவு, 144 தடை பேருந்தை யார் இயக்குவார்கள் தெரியவில்லை.. R.Kumaresan. வைரஸ் கிருமிகள், வைரஸ் நோய் பரவுதல், ஊரடங்கு உத்தரவு, 144தடை இருக்கும்போது மற்ற நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்றாலும் பெரும்பாலும் இருசக்கர வாகனம்தான்.. R.Kumaresan.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-மார்-202009:32:47 IST Report Abuse
அசோக்ராஜ் மருத்துவமே வகையில் உள்ளவர்களையும் அலட்சியத்தால் இழக்கக் தொடங்கினால் நாம் கரையேறுவது நிச்சயம் இல்லை. இந்த சமயத்தில் இன்னொரு வர்க்கத்தையும் நினைவு கூறுகிறேன். நீலச்சேலையில் உருக்குலைந்த தேகத்தோடு 128 வகைக் கிருமிகளையும் வெறும் கையால் கூட்டிப் பெருக்கி அள்ளிப்போட்டு வேகும் வெயிலில் பத்து மணி நேரம் உழைத்து நம்மையெல்லாம் நோய் அண்டாமல் காத்து வரும் பாமரப் பெண்களை நன்றியுடன் நினைக்க வேண்டிய நேரம் இது. சில வருடங்கள் முன்பு வரை தோட்டிகள் என்று அலட்சியப்படுத்தப்பட்ட வர்க்கத்தின் வாரிசுகள். எந்த டெவலப்மெண்ட்டும் அண்டிவிடாதவாறு பாதுகாக்கப்பட்ட பரம்பரை. சாக்கடைக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்வதற்காகவே அனிமல் ஃபார்ம் போல வளர்க்கப்படும் வர்க்கம். மனித உரிமை அத்தனையும் மறுக்கப்பட்ட தரித்திர நாராயணர்கள். உள்ளாட்சி கள் அவர்களுக்கு வழங்கும் கூலி எவ்வளவு தெரியுமா? தெரியாத வாசகர்கள் அவர்களிடம் சென்று கேளுங்கள். நமக்கு சோறு இறங்காது. கொரோனாவை ஏன் ஆண்டவன் அவிழ்த்து விட்டான் என்பதும் புரியும்.
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
27-மார்-202009:03:04 IST Report Abuse
svs வெளி நாடுகளில் உள்ள வசதிகள் எல்லாம் இங்கு கிடையாது ...காசு வாங்கி ஊழல்வாதிகளுக்கு வாக்களித்து மொத்த பணமும் கொள்ளை போனது ....இப்பொது வெளியில் வரக்கூடாது என்றால் ஏன் வரக்கூடாது என்று சட்டம் பேசுவான் ....இங்குள்ள மக்கள் தொகைக்கு நோய் தடுப்புதான் உதவும் ....லட்சக்கணக்கான பேருக்கு வியாதி வந்தால் பிறகு இத்தாலி போல் பிணத்தை புதைக்க கூட இடமிராது ....இலவசங்களுக்கு , டாஸ்மாக்க்கு அடிமையாகி , சுத்தம் சுகாதாரம் பேணாமல் நோய் வாய்ப்பட்டு மாள வேண்டியதுதான் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X