பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தோர் 29 ஆக உயர்வு 60 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 29 ஆக உயர்ந்துள்ளது; 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு, 2.09 லட்சம் பேர் வந்துஉள்ளனர். அவர்களில், 15 ஆயிரம் பேரின் வீடுகள் மட்டுமே கண்காணிக்கப்பட்டன. நேற்று இந்த எண்ணிக்கை, 60 ஆயிரம் வீடுகளை தாண்டியுள்ளது.
இவற்றில், 1.5 லட்சம் பேர் வசிக்கலாம் என, கூறப்படுகிறது.தற்போது வரை, 1,039 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 933 பேருக்கு பாதிப்பு இல்லை என, உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் வரை, 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், துபாயில் இருந்து திருச்சி வந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, லண்டனில் இருந்து, சென்னை திரும்பிய, சைதாப்பேட்டையை சேர்ந்த, 65 வயது பெண்ணுக்கும், 24 வயது வாலிபருக்கும், கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள், இருவரும், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சிறப்பு சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 29 ஆக உயர்ந்துள்ளது.
இதை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் உறுதி செய்தார். இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வந்த பெரும்பாலானோர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு, 13 ஆயிரத்து, 727 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம், 2,464 வெண்டிலேட்டர் வசதி உள்ளது.தற்போது, அரசு மருத்துவமனைகளில், கொரோனா அறிகுறியுடன், 284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 350 படுக்கை வசதியுடன், சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக பிரிவு, இன்று முதல் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X