அரசியல் செய்தி

தமிழ்நாடு

, ஏப்ரல், 2 முதல், ரேஷன் கடைகளில் 'கொரோனா' பாதிப்புக்கு நிவாரணம்

Added : மார் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள, ஊடரங்கு பாதிப்புக்கான நிவாரண தொகை, ஏப்ரல், 2 முதல், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், தமிழக அரசு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் ரேஷன் பொருட்கள் அடங்கிய நிவாரணத்தை அறிவித்துள்ளது.
அவை, ரேஷன் கடைகளில், ஏப்ரல், 2 முதல் வழங்கப்பட உள்ளன.இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், கோவிந்தராஜ், மாவட்ட இணை பதிவாளர்களுக்கு, நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம்; ஏப்ரல் மாதத்திற்கு உரிய, அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இத்தருணத்தில், அவற்றை, ஏப்., 2 முதல், 15ம் தேதிக்குள் வினியோகித்து முடிக்க, உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இவற்றை வழங்கும் பணியை மேற்கொள்ளும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, தினமும், 200 ரூபாயை, பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக, சங்கங்கள் அனுமதிக்க வேண்டும்.ரேஷன் ஊழியர்களுக்கு, முக கவசமும்; ரேஷன் கடைகளுக்கு கிருமி நாசினிகளும் வழங்க வேண்டும். இதை, கூட்டுறவு மாவட்ட இணை பதிவாளர், மொத்த பண்டக சாலை மேலாண் இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-மார்-202020:46:10 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லது வரவேற்போம்...
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-மார்-202020:44:24 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லது வரவேற்போம் மனசாட்சிப்படி செயல்பட்டால் நலமே. சுயநலம் பாராமல் .
Rate this:
Share this comment
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
27-மார்-202008:18:10 IST Report Abuse
Ramachandran Rajagopal ஒரு வார ஊரடங்கிற்கு ரூபாய் ஆயிரம் அறிவிக்கப்பட்டது.மேலும் இரு வாரங்களுக்கு மத்திய அரசு உத்தரவால் அது நீடிப்பதற்கு தனியாக நிவாரணம் அறிவிப்பதை தவிர்ப்பதற்காகவும் அறிவித்தால் தகுதியில்லாத மத்திய மாநில அரசில் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேர்த்துதான் அறிவிப்போம் என்கின்ற வாக்கு வாங்கி கொள்கையாலும் இப்படி வசதியற்றவர்களை ஏமாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X