கொரோனா வைரஸ் பாதிப்பு கோடையில் குறையுமா?

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

வாஷிங்டன்: வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் தொற்று குறையும் என மசாசூட் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் (எம்.ஐ.டி) கணித்துள்ளார்கள்.latest tamil news
எம்ஐடியின் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, கொரோனா வைரஸ்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை 18 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சராசரி வெப்பநிலையி்ல் உருவாகி உள்ளன. வெப்பநிலை அதிகரிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.


latest tamil news

கோடையில் குறையும்


உலகின் வடபகுதிகளில் கோடை வலிமை பெறும்போது கொரோனா வைரஸ் பரவுதல் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மார்ச் 22க்கு பிறகு சுற்றுச்சூழல் காரணிகளால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் வடக்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா (அமெரிக்கா மற்றும் கனடா) கோடையில் கட்டுப்படும் என்பதை எங்கள் ஆய்வு தெளிவுபடுத்துகிறது.
ஜனவரி 22 முதல் மார்ச் 21 இடையிலான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இவை 4 டிகிரி முதல் 10 டிகிரி வெப்ப நிலையில் பரவி இருக்கிறது.மார்ச் 10 க்குப் பிறகு, கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடைகால வெப்பநிலை கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் என அந்த முடிவு தெரிவிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202009:32:22 IST Report Abuse
ஆரூர் ரங் அரேபிய வெயிலில கூட பரவுது . உண்மையில் காற்றிலுள்ள ஈரப்பதமே குறைந்தால்தான் பரவும் வேகம் குறையலாம்
Rate this:
Share this comment
Thamilarasu K - Salem,இந்தியா
27-மார்-202011:14:09 IST Report Abuse
Thamilarasu Kஅரேபியாவில் வெயில் அதிகமாக இருந்தாலும், மக்கள் முழுக்க, முழுக்க Air Conditioned சூழலில் வாழ்கிறார்கள், எனவே வைரஸ் தொற்று எளிதாக பரவுகிறது... இந்தியாவில் அந்த அளவிற்கு வசதியான வாழ்க்கை இல்லை, ஆனால் அதுவே நம்மை காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன்......
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
27-மார்-202015:05:03 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஅரேபிய நாடுகளில் ஈரப்பதம் தற்பொழுது குறைவுதான்...
Rate this:
Share this comment
Cancel
Annan - Madurai,இந்தியா
27-மார்-202009:07:21 IST Report Abuse
Annan Reply@(வெற்றிக்கொடிகட்டு)Stanley Rajan. RSS ஐ புகழ் பாட வேண்டுமென்றால் தனியாக புகழ் பாடிக்கொள்ளுங்கள். மற்றவர்களை வம்புக்கிழுப்பது உங்கள் வக்ர புத்தியையே காண்பிக்கிறது. இந்தியா பல மொழி மற்றும் கலாச்சார பிண்ணனி கொண்டது. அதை மத்தியில் ஆள்பவர்கள் காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி பிஜேபியாக இருந்தாலும் சரி மறந்து விடுகிறார்கள். மத்திய அரசு தவறான கொள்கை முடிவு எடுத்து அதனால் மாநில உரிமையோ கலாச்சாரமோ பாதிக்கப்பட்டால் அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிகளும் அமைப்புக்களும் தான் போராட வேண்டியுள்ளது (RSS நாட்டின் கலாச்சாரம், உரிமை காக்க போராடியதில்லை). அதில் ஒன்றுதான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். பல மொழி பேசும் நாட்டில் ஹிந்தி மட்டுமே பயிற்று மொழி என்றபோது அண்ணா எதிர்த்தார். அதனால்தான் இந்தியாவில் ஆங்கில வழி கல்வி தொடர்ந்தது. ஆங்கிலம் தொடர்பு மொழியானது. அதே நேரத்தில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று மாநில சுயாட்சி (திராவிட நாடு) கேட்ட அண்ணா இந்திய - சீன போருக்கு பின் நாட்டின் நலன் கருதி தனி திராவிடநாடு கொள்கையை கைவிட்டார். ஆகவே தேசபக்தி RSS க்கு மட்டும் சொந்தமில்லை. எல்லோரிடமும் இருக்கிறது. தேவைப்படும் போது வெளிப்படுத்துவார்கள். போர்க்கால சூழலும் உள்நாட்டு சம்பவங்களும் வெவ்வேறானவை. அதை RSS மற்றும் கட்சிகளோடு ஒப்பிடுவது பொருத்தமானது அல்ல.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
27-மார்-202004:42:12 IST Report Abuse
venkatan அதான் நாங்க முன்னமே சொல்லீட்டமே...இதுக்கு ஓர் ஆராய்ச்சி.பல் தேய்த்தால் பற்சொத்தை வராதா என்பதுபோல.எல்லாமே ஆராய்ச்சிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X