பொது செய்தி

தமிழ்நாடு

மது வகைகளை இடம் மாற்ற, 'டாஸ்மாக்' உத்தரவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை : தொலைதுார மது கடைகளில் உள்ள மது பாட்டில்களை, கிடங்குகளுக்கு எடுத்து செல்லும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு, 'டாஸ்மாக்' உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,300 கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. ஒவ்வொரு கடையிலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி விடுத்த, 21 நாட்கள் ஊரடங்கு வேண்டுகோளை ஏற்று, மது கடைகளை, ஏப்., 14ம் தேதி வரை மூடவும், அரசு முடிவு செய்துள்ளது.இதனால், சமூக விரோதிகள், மது கடைகளில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, தொலைதுார மது கடைகளில் உள்ள மது வகைகளை, கிடங்குகளுக்கு எடுத்து செல்லும்படி, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:பல மது கடைகள், ஊருக்கு வெளியில், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளன. தற்போது, ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மது கடைகளில், கொள்ளை சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது.எனவே, தொலைதுாரங்களில் உள்ள கடைகளில் இருக்கும் மது பாட்டில்களை, கிடங்குகளுக்கு எடுத்து சென்று, இருப்பு வைக்கவேண்டும்.கிடங்குகளில் இடம் இல்லை எனில், ஏப்ரல், 15 வரை, திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, அங்கு வைப்பதுடன், அவற்றை கண்காணிப்பு கேமராக்களில் கண்காணிக்கும்படியும், நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும், கடையில் இருந்து மது வகைளை எடுக்கும் போதும், அவற்றை கிடங்குகள், மண்டபங்களில் இருப்பு வைக்கும் போதும், இருப்பு விபரத்தை கவனமுடன் பதிவு செய்துடன், இடமாற்ற பணிகளை, போலீஸ் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X