பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலேயே இருங்க...! நடிகை த்ரிஷா வேண்டுகோள்

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வீட்டிலேயே இருங்க...! நடிகை த்ரிஷா வேண்டுகோள்

சென்னை 'கொரோனா பாதிப்பில் இருந்து, தற்காத்து கொள்ள, 21 நாட்கள் வீட்டிலேயே இருங்கள்' என, நடிகையும், 'யுனிசெப்' அமைப்பின், நல்லெண்ண துாதருமான, த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள, 'வீடியோ' பதிவு:கொரோனா வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். கொரோனாவை தடுக்க, 21 நாட்கள் வீட்டில் இருப்பது மிகவும் அவசியம். இவ்வளவு நாட்கள், வீட்டிலேயே இருப்பது எளிதல்ல என்பது, எனக்கும் தெரியும்.நம்மை பாதுகாத்து கொள்ள, இதை செய்து தான் ஆக வேண்டும். எனவே, தயவு செய்து வீட்டில் இருங்கள்.இவ்வாறு, த்ரிஷா கூறியுள்ளார்.திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும், சமூக வலைதளங்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காமெடி நடிகர் சதீஷ், ஒரு நாள் வீட்டில் இருந்ததை, டுவிட்டரில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். கொரோனா நிவாரண நிதிக்கு, நடிகர் ரஜினி, 50 லட்சம் ரூபாய் கொடுத்தார். இதை விமர்சித்த இயக்குனர் கவுதமன், '50 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, மளிகை பொருட்கள் கொடுத்து இருக்கலாம்' என, கூறியிருந்தார்.இதற்கு நடிகர், எஸ்.வி.சேகர் தன் டுவிட்டரில், 'ஏன் சமைச்சு ஊட்டி விடலாமே... என்று கூட சொல்லியிருக்கலாம். ரஜினியை பற்றி பேசியே பிரபலமாகி விடலாம் என்ற லட்சியம், கவுதமனுக்கு கடைசி வரை நிறைவேறாது' என, பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.muthusamy - Colwyn Bay,யுனைடெட் கிங்டம்
27-மார்-202001:06:33 IST Report Abuse
s.muthusamy Is she Tamilnadu state's medical officer? these people genuinely think that they are qualified to say anything on any event. Tamilnadu is cursed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X