அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெருப்பு வளையமான ஊரடங்கை தாண்டினால் ஆபத்து: அன்புமணி

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை :'நம்மையும், நாட்டையும் பாதுகாக்கும் ஊரடங்கு என்ற, நெருப்பு வளையத்தை தாண்டுவது, விட்டில் பூச்சி, விளக்கில் விழுவதற்கு சமம்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க, பிரதமர் அறிவித்த, 21 நாட்களுக்கான ஊரடங்கில், அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனநிறைவு அளிக்கின்றன.ஆனால், பொதுமக்களில் ஒரு தரப்பினர், இதை விளையாட்டாகவும், விடுமுறையாகவும் நினைத்து, சாலைகளில், வாகனங்களில், சுதந்திரமாக வலம் வந்தது மிகுந்த கவலை அளிக்கிறது.

நம்மையும், நாட்டையும் காக்க, நம்மை சுற்றி நெருப்பு வளையத்தை எரிய விட்டிருக்கிறோம். இந்த வளையத்தை தாண்ட முயல்வது, விட்டில் பூச்சி விளக்கில் விழுவதற்கும், விளக்கை பிடித்தபடி, கிணற்றில் குதிப்பதற்கும் சமம்.இந்த நிகழ்வுகளில், தவறு செய்தவர்களுக்கு தான், பாதிப்பு ஏற்படும். ஆனால், ஊரடங்கை மீறுவோர், அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றியுள்ள அப்பாவிகளுக்கும், ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X