பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க வாதசுர குடிநீர்? சித்தா நிறுவனங்கள் ஆராய்ச்சி

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை :கொரோனா வைரஸ் பாதிப்பை, வாதசுர குடிநீர் கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வை, மத்திய அரசின் சித்த மருத்துவ பிரிவு துவக்கியுள்ளது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு, இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக, உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சளி, இருமல், காய்ச்சலை கட்டுப்படுத்த, கபசுர குடிநீரை பயன்படுத்த, சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு சித்த மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.நுரையீரல் பாதிப்பு ஏற்படும் போது, அதை தடுக்க, வாத சுர குடிநீர், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.இதில், 15 வகையான மூலிகைகள் இடம் பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் உடலில் நுழைந்து, நுரையீரல் பாதிக்கப்படும் பட்சத்தில், இந்த வாத சுர குடிநீர் கைகொடுக்கும் என, சித்த மருத்துவர்கள் கருதுகின்றனர்.இதுதொடர்பான ஆராய்ச்சியில், மத்திய அரசின் சித்த மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், தாம்பரத்தில் உள்ள, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமின்றி, கேரளாவில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திலும், இதுதொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X