அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைக்கால உத்தரவுகள் ஏப்., 30 வரை நீட்டிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை: மார்ச், 20வரை அமலில் இருந்த இடைக்கால உத்தரவுகளை, ஏப்ரல், ௩௦ வரை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவுவரும் வரை, இந்த இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு எடுத்தது. ஊரடங்கு உத்தரவை, ௨௧ நாட்கள் நீட்டிப்பதாக, பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.இந்நிலையில், நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' நேற்று முக்கிய உத்தரவை பிறப்பித்தது. தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:பல்வேறு வழக்குகளில், உயர் நீதிமன்றம், தீர்ப்பாயங்கள், கீழமை நீதிமன்றங்களில், இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கும்.இந்த இடைக்கால உத்தரவுகள், மார்ச், ௨௦ வரை அமலில் இருந்திருக்கும். தற்போது, முழு அடைப்புக்கு, மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களை அணுகுவதில் சிரமம் உள்ளது.எனவே, உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் தொடர்பாக, தகுந்த உத்தரவை பிறப்பிக்கிறோம்.  மார்ச், ௨௦ வரை அமலில் இருந்த இடைக்கால உத்தரவுகள், ஏப்., ௩௦ வரை நீட்டிக்கப்படுகின்றன. இந்த உத்தரவுகள், மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, வெளியேற்றவோ, இடிக்க வோ, உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் அல்லது சிவில் நீதிமன்றங்கள் உத்தரவுகள் பிறப்பித்திருந்து, அந்த உத்தரவுகள் இன்று வரை அமல்படுத்தாமல் இருந்தால், அவற்றை, ஏப்., ௩௦ வரை நிறுத்தி வைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஜாமின், முன்ஜாமின், பரோல் வழங்கப்பட்டு, அந்த அவகாசம், ஏப்.,௩௦ க்கு முன் முடிவடைந்தால், அவையும், ஏப்., ௩௦ வரை நீட்டிக்கப்படுகிறது.  மேற்குறிப்பிட்ட உத்தரவுகள் அனைத்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பொறுத்தே அமையும். இந்த இடைக்கால நீட்டிப்பு உத்தரவுகளால், யாருக்காவது பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால், தகுந்த நிவாரணம் கோரி முறையிடலாம். ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வருவாய் வசூல் நடவடிக்கைகள்; வெளியேற்றம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். அதற்கு, அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை பெறலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X