அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீணாகும் பயிர்களுக்கு இழப்பீடு :ராமதாஸ்

Added : மார் 26, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வீணாகும் பயிர்களுக்கு இழப்பீடு :ராமதாஸ்

சென்னை 'அறுவடை செய்யாமல், வீணாகும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், தமிழகத்தை மருத்துவ அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும், கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த பாதிப்பு, தொழில் மற்றும் வணிக துறையினருக்கு தான், அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விவசாயிகளும், மிக கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.நிலக்கடலை, தர்பூசணி பழங்கள், சோளம், கம்பு போன்ற பயிர்கள், அறுவடை செய்யப்படாமல், ஏக்கர் கணக்கில், பல லட்சம் ரூபாய் நஷ்டம் உருவாகி உள்ளது. விவசாயிகள் நலன் காக்கும் அரசாக செயல்படும் தமிழக அரசுக்கு, இந்த பாதிப்பிலிருந்து, விவசாயிகளை காப்பாற்றும் பொறுப்பும் உண்டு. எனவே, நிலக்கடலை மற்றும் தர்பூசணி சாகுபடி செய்து, அவற்றை அறுவடை செய்து பணமாக்க முடியாத விவசாயிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-மார்-202020:08:06 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எல்லாமே அரசேசெய்ய வேண்டும் அரசியல்செய்ய இதெல்லாம் ஓர் சான்றியமாகும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-மார்-202019:13:36 IST Report Abuse
ஆரூர் ரங் வீணாகும் பயிர்களுக்கு இழப்பீடு ? இப்படிக்கு மரத்தையெல்லாம் வெட்டின ஆளு
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
27-மார்-202013:31:33 IST Report Abuse
Girija தைலாபுர விளைச்சலில் இருந்து தர்றது? அரசு மருத்துவரான வேலை பார்த்து இவ்வளவு சொத்து சேர்க்கமுடியுமா ? மூலபத்திரத்தை காட்டுங்கள் விசாரிக்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X