சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலியான மதுரை ஒப்பந்ததாரருக்கு கொரோனா தொற்றியதில் மர்மம் : பரப்பியவர் அகப்படாததால் புதிய தலைவலி

Added : மார் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
   பலியான மதுரை ஒப்பந்ததாரருக்கு  கொரோனா தொற்றியதில் மர்மம் : பரப்பியவர் அகப்படாததால் புதிய தலைவலி

மதுரை : மதுரையில் கொரோனாவிற்கு பலியான கட்டட ஒப்பந்ததாரருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதில் மர்மம் நீடிக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 9 பேருக்கும் சோதனையில் அறிகுறி இல்லை என உறுதியானது.மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயது கட்டட ஒப்பந்ததாரர் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியானார். பாதிப்புள்ள நாடுகளுக்கு செல்லாத இவருக்கு கொரோனா பாதித்தது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தாய்லாந்தில் இருந்து மத வழிபாட்டிற்காக மதுரை வந்த 9 பேர் குழுவை இவர் வழிநடத்தினார். அந்நாடு கொரோனா பாதிப்பிற்குள்ளானது என்பதால், 9 பேரில் யாரிடமிருந்தாவது பாதிப்பு தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டது.இக்கால கட்டத்தில் மதுரை நகரில் உள்ள 4 மசூதிகளில் 9 பேரும் வழிபாடு நடத்திவிட்டு, புறநகர் பகுதிக்கு சென்றிருந்தனர். அவர்களை மடக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள் 9 பேரையும் தனிமைப்படுத்தினர். அதில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். 9 பேருக்கும் ரத்தம், தொண்டைச் சளி மாதிரி எடுக்கப்பட்டது. மதுரை கொரோனா பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.இது ஒருபுறம் ஆறுதலான விஷயம். ஏனென்றால் இவர்கள் பல்வேறு மசூதிகளில் வழிபாடு நடத்தினர். ஒருவேளை பாதிப்பு இருந்தால் மசூதிக்கு வந்த பலருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. தற்போது அந்த அச்சம் நீங்கியுள்ளது.அதேவேளையில் சுகாதாரத்துறைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. கட்டட ஒப்பந்ததாரருக்கு யார் மூலம் கொரோனா பாதிப்பு தொற்றியது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. பரப்பிய நபர் இதுவரை அகப்படாத நிலையில், மேலும் பலருக்கு கொரோனாவை அவர் பரப்பும் அபாயம் உள்ளது.


தனிமையில் குடும்பம்


கட்டட ஒப்பந்ததாரரை கையாண்ட அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இதுவரை இல்லை. ஒருவேளை அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
30-மார்-202005:59:25 IST Report Abuse
jay Kanda kanda edaththuku poi .ippa thamilarkal kaththi apaththu
Rate this:
Share this comment
Cancel
jay - toronto,கனடா
30-மார்-202005:57:44 IST Report Abuse
jay nallathu ileana modi thaan palli Vasal kke poi noyai parapinaar enpaarkal nanri ketta kuuttam
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
29-மார்-202018:32:57 IST Report Abuse
 nicolethomson குடும்பத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று சொல்வது மிக நல்ல சொல் . அவர்களை அவர்கள் இறைவன் காக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X