சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் வீட்டு தனிமையில் 77 குடும்பங்கள் :கொரோனா கண்காணிப்பில் 548 பேர் ஒரே வாரத்தில் 500ஐ தாண்டியது

Added : மார் 26, 2020
Share
Advertisement


மதுரை,:மதுரையில் 77 குடும்பத்தினர் உட்பட 548 பேர் கொரோனா தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஒரே வாரத்தில் 500 ஆக அதிகரித்துள்ளது.
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கொரோனாவுக்கு பலியானார். தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி இது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் குடும்பத்தினர், அவர் வசித்த பகுதியை சேர்ந்த 35 குடும்பத்தினர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மூன்று தெருக்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ஒப்பந்ததாரர் சென்று வந்த மசூதியும் மூடப்பட்டுள்ளது.
மத வழிபாட்டிற்காக மதுரை வந்த தாய்லாந்து நாட்டவர்கள் சிலருடன் இவர் தொடர்பில் இருந்துள்ளதால், அவர்கள் மூலமே கொரோனா பாதித்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. இதனால் அவர்கள் வழிபாடு நடத்திய விளாங்குடி, மீனாம்பாள்புரம், எஸ்.எஸ்.காலனி மசூதிகளில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று வந்த 77 குடும்பத்தினர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் 340 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.இதுதவிர புறநகர் பகுதியில் 208 பேர் தனிமையில் இருக்கின்றனர். இவர்களில் பலரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். ஒரு வாரத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 50ஐ தாண்டவில்லை. இப்போது 548 ஆக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பை மீறி தப்பிய காதலன்துபாயில் இருந்து வந்த சிவகங்கை வாலிபர், மதுரை சின்னஉடைப்பு கொரோனா தனிமை மையத்தில் கண்காணிப்பில் உள்ளார். நேற்று அங்கிருந்து திடீரென தப்பி தனது ஊருக்கு சென்று காதலியை சந்தித்தது தெரிந்தது. தகவலறிந்த போலீசார் அவரை பிடித்து மதுரை மையத்திற்கு அனுப்பினர். கண்காணிப்பில் இருப்பவர் சந்தித்ததால், அவரது காதலியும் தற்போது வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

வீண் பீதி வேண்டாம்
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. கண்காணிப்பில் உள்ள 548 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தியுள்ளோம். ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளில் உள்ளவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X