ராணுவத்தை களமிறக்க தயாராகும் மத்திய அரசு முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

Updated : மார் 28, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
ராணுவத்தை,களமிறக்க,தயாராகும்,மத்திய அரசு,முப்படை தளபதிகள், ராஜ்நாத் சிங், ஆலோசனை

புதுடில்லி, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அபாயம்மற்றும் பீதி கலந்த சூழ்நிலையை சமாளிக்கவும் உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராணுவத்தை களமிறக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை நாட்டு மக்களிடம் உரையாடி நிலைமைகளை விளக்கினார்.இந்நிலையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்றுமுப்படை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.

இதில் விமானப்படை தளபதி படோரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங், ராணுவ தளபதி நரவானே கலந்து கொண்டனர்.இவர்கள் தவிர முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பாதுகாப்பு செயலர் அஜய் குமார் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இதுகுறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர்கூறியதாவது:தற்போது நாட்டை சூழ்ந்துள்ள கொரோனா அபாயத்தை எதிர்கொள்ள ராணுவமும் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.பாதிக்கப்பட்ட மக்களைதனிமைப்படுத்துவதுதான் மிக முக்கியபணியாக உள்ளது.அதற்கான உள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினரை ஈடுபடுவார்கள்.குறிப்பாக புயல்வேகத்தில் மருத்துவமனைகளை உருவாக்குதல் ராணுவத்தில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோரை களத்தில் இறக்குவது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

நாட்டின் எந்த மூலைக்கும் விரைந்து சென்று கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம்.மத்திய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் ராணுவத்திற்கான தேவை குறித்து கோரிக்கை வரலாம்என்பதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் கேட்டுள்ளார்.இவ்வாறு அந்தஅதிகாரி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
31-மார்-202009:39:53 IST Report Abuse
thulakol சீக்கிரம் இறக்கி இருந்தால் வெளிநாட்டினரை வெளியே துரத்தி இருக்கலாம் . அவனுக அவர்களுடைய கொள்கைகளை பரப்பி விட்டு கூட கொரோனவையும் பரப்பி விட்டு விட்டார்கள் . இனிமேலும் தாமதிக்காமல் இராணுவம் உள்ளெ வந்து சரி செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
29-மார்-202006:56:48 IST Report Abuse
Raja ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் மூர்க்கமார்க்கத்தினரை தடுத்தால் போலீசையே தாக்குகிறார்கள். அரபு அடிமைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ராணுவம் இருந்தால் நல்லது. வெளிநாட்டிலிருந்து கொரோனா பிடித்த ஆட்களை இறக்குமதி செய்து பள்ளிவாசல்களில் தங்க வைக்கிறார்கள். அதனால் எல்லா பள்ளிவாசல்களையும் சோதனை போடுங்க.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-மார்-202021:34:55 IST Report Abuse
அசோக்ராஜ் கொரோனா விளம்பரத்தில் தன் பெயரும் இடம் பெறவேண்டும் என்ற ஆசையில் ஏதோ சொல்கிறார். ஒதுக்குப்புறமாக, தொற்று இல்லாமல், ஆரோக்கியத்துடன் இருக்கும் ராணுவத்தினரை நகருக்குள் அலைய விட்டு நோயாளியாக்க அவ்வளவு ஆர்வம். ஹே ராம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X