'கொரோனா' பரவலை தடுப்போம் உலக மக்களை காப்போம்' 'ஜி - 20' தலைவர்கள் உறுதி

Added : மார் 26, 2020
Share
Advertisement

ரியாத், :'உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என நேற்று நடைபெற்ற 'ஜி - 20' அவசர மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உறுதி ஏற்றனர்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் 'ஜி- 20' நாடுகளின் அவசரக் கூட்டம் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்தது.இதில் துவக்க உரையாற்றிய முகமது பின் சல்மான் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கொரோனாவால் வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள் பொருளாதார பாதிப்புகள் ஆகியவற்றுக்கு உதவ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது 'கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுப்பு நாடுகள் பூரண ஒத்துழைப்பை தரும்' என உறுதி அளித்தனர்.ஜி - 20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.இதைத் தவிர ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளது.உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் 4.24 லட்சம் பேருக்கு தொற்றியுள்ளது.உலகெங்கும் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X