பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு: கீழடியில் அகழாய்வு நிறுத்தம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்புவனம் :ஊரடங்கு உத்தரவால் கீழடியில் அகழாய்வு நிறுத்தப்பட்டுள்ளது.கீழடியில் பிப்ரவரி 19ல் 6ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. மணலுார் தவிர்த்து கீழடி, அகரம், கொந்தகை, உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன.கீழடியில் நீதியம்மாள் நிலத்தில் நடந்த அகழாய்வில் இரு வண்ண பானைகள், 10 வரிசைகள் கொண்ட தரை தளம், பானைகள், பானை ஓடுகள் கிடைத்தன. கொந்தகை அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. கைப்பற்றப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்ய மதுரை காமராஜர் பல்கலை கழக மரபணு ஆய்வு பிரிவும் கொந்தகை அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது.அகரத்தில் நடந்த அகழாய்வில் பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, சக்திவேல், பாஸ்கரன், ரமேஷ் மற்றும் 55 தற்காலிக பணியாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.'கொரோனா' வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கீழடி அகழாய்வு தளத்திலும் பணிகள் நிறுத்தப்பட்டு அகழாய்வு குழிகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளன. கொந்தகை அகழாய்வு தளத்திற்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அகழாய்வு நடைபெற வாய்ப்பில்லை என்பதால் தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X